யூகோ வங்கி அதிகாரி பதவிகளில் இட ஒதுக்கீடு குளறுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

யூகோ வங்கி அதிகாரி பதவிகளில் இட ஒதுக்கீடு குளறுபடி

 வங்கி நிர்வாகம் தற்போது திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது


வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அதிகாரி பதவிகளுக்கான பணியிடங்கள் பற்றிய விவரங்களில், யூகோ வங்கியில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக அறிவிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் சார்பில் 15.10.2020 அன்று தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்மூலமாக யூகோ வங்கியின் மேலாண்மை இயக்குநர், நிதி அமைச்சகம், ஆகியோர்க்குக் கடிதம் அனுப்பப்பட்டது.


அதில், யூகோ வங்கி தெரிவித்துள்ள 350 இடங்களில், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு சதவீதம் முறையே 27%, 15%, 7.5% என்று ஒதுக்கப்படாமல், குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓபிசி பிரிவினர்க்கு 95 பதவிகளுக்குப் பதிலாக 14-ம், எஸ்.சி. பிரிவினர்க்கு 53-க்கு பதிலாக 35ம், எஸ்.டி. பிரிவினர்க்கு 26-க்குப் பதிலாக 10 பதவிகளும் ஒதுக்கப்பட்டன. இதன் காரணமாக, இட ஒதுக்கீடு பிரிவினர்க்கு 115 பதவிகள் இழப்பு என்பதைச் சுட்டிக்காட்டி இதனை சரி செய்திட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.


தற்போது வங்கி பணியாளர் தேர்வுக் கழகம் திருத்தப் பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், கனரா வங்கியில் அதிகாரி பதவி இடங்கள் எதுவும் முன்னர் அறிவிக்கப்படவில்லை. தற்போது 2100 அதிகாரி பதவிகள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கி தேர்வு எழுதும் அனைவருக்கும் மேலும் கூடுதல் வாய்ப்பை உருவாக்கும்.


No comments:

Post a Comment