ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு

சென்னை, அக். 26- ரயிலில் தனியாக பயணிக்கும் பெண் களின் பாதுகாப்புக்காக ‘என் தோழி’ அமைப்பை ரயில்வே பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது. பத்திரமாக அவர் கள் வீடு சென்று சேரும் வரை கண்காணிக்கின்றனர்.


விரைவு ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் ‘மேரி ஷாயிலி’ எனப்படும் ‘என் தோழி’ அமைப்பு தொடங் கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கான இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொடங் கப்பட வேண்டும் என கடந்த 15ஆம் தேதி ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணை யருக்கு சுற்றறிக்கை அனுப்பி யது.


அதன்படி தெற்கு ரயில்வே யின் சென்னை கோட்டத்தில் ‘என் தோழி’ திட்டம் ரயில்வே பாதுகாப்பு படை ஆணைய ரால் தொடங்கி வைக்கப்பட்டது.


No comments:

Post a Comment