திராவிடர் கழகத் தலைவர் வரவேற்பு
மத்திய தொல்லியல் கல்லூரியின் பட்டயப் படிப்புக்கான தகுதியில் செம்மொழியான தமிழ் இடம்பெறாதது குறித்து தமிழ்நாட்டிலிருந்து எழுந்த கண்டனக் குரல்களின் விளைவாக, செம்மொழித் தமிழையும், பிற மொழிகளையும் சேர்த்து நேற்று (8.10.2020) புதிய அறிவிக்கை வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
விழிப்புடன் போராடினால்தான் நம் உரிமைகளை வெல்ல முடியும் என்ற நிலையே இன்று உள்ளது. இந்தப் பிரச்சினையில் முன் முயற்சி எடுத்து கடிதம் எழுதிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நம் பாராட்டுகள்!
மொழி, பண்பாடு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து வகை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளிலும் நாம் எப்போதும் விழிப்பாக இருந்தால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
9.10.2020
No comments:
Post a Comment