செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 9, 2020

செய்தியும், சிந்தனையும்....!

தப்பு, தப்பு!


தி.மு.க.வுடன் கூட பா.ஜ.க. கூட்டணி அமைக்கலாம்: - பொன்.ராதாகிருஷ்ணன், மேனாள் மத்திய அமைச்சர்.


நாட்டைக் கெடுத்தது திராவிட கட்சிகள் - ஆட்சிகள் என்று சொன்னவர்கள் மத்தியில் இருந்து நாட்டைக் கெடுத்து வருவதால், நாங்கள் கூட்டு சேருவதில் என்ன தப்பு என்கிறாரோ!


நீதிமன்ற அவமதிப்பல்லவா!


நில ஆக்கிரமிப்புக்கு உதவும் அதிகாரிகள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்: - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.


பெரும்பாலான கோவில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான்!


தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக் கோவில்களின் எண்ணிக்கை 77,450. இவை அகற்றப்படவேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு (14.9.2010). இதனைச் செய்யாத மாநில அரசின் தலைமைச் செயலாளர் நேரில் வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி 10 ஆண்டுகள் ஆயிற்றே - அதைச் செய்ததா தமிழ்நாடு அரசு. இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?


அய்யோ, சோஷியலிசம்!


140வழித்தடங்களில் 150 தனியார் இரயில்கள்.


கார்ப்பரேட்டுகளின் காட்டில் பெய்யும் மழை! இதுதான் - அரசமைப்புச் சட்டத்தின் 'சோசலிஸ்ட்'மீது சத்திய பிரமாணம் செய்து ஆட்சியை ஏற்ற இலட்சணம்!


No comments:

Post a Comment