ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசால் கடனாகக் கூட வழங்க முடியாதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 13, 2020

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசால் கடனாகக் கூட வழங்க முடியாதாம்

 நிர்மலா சீதாராமன் புலம்பல்


புதுடில்லி, அக் 13 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்காக, மத்திய அரசால் கடன் வாங்க இயலாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலுவைத்தொகையை வழங்க கடன் பெறுவது என்பது மத்திய அரசின் கடன் சுமையை அதிகரிக்கும் என்றார். மேலும், நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகளே கடன் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கடன் வாங்க பல மாநிலங்கள் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment