பெரியார் சிலை அவமதிப்பு தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

பெரியார் சிலை அவமதிப்பு தலைவர்கள் கண்டனம்

பெரியார் சிலை அவமதிப்பை தடுக்காவிட்டால் அ.தி.மு.க. அரசு மீது பழி வந்து சேரும்


கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை



தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (27.10.2020) வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 


திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தி யிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.


இத்தகைய குற்றங்களை செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  இதை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிப்பார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமிழகம் ஒருபோதும் மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அனுமதிக்காது. எனவே, தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறுவார்களேயானால், தந்தை பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தார்கள் என்கிற பழி அதிமுக  மீது சுமத்தப்படும் என்பதை எச்சரிக் கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பெரியார் சிலைக்கு காவி சாயம் விஷமிகள்மீது நடவடிக்கை தேவை


மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்



பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டி ருப்பது கோழைத்தனமான செயல். இதை செய்தவர்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்தி ருக்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர் கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக் கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.குற்றங்களிலும் சம் பந்தப்பட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


பெரியாரை இழிவு செய்து வரும் கும்பலை கைது செய்!


இரா. முத்தரசன் வலியுறுத்தல்



இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வருமாறு: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம், சமத்துவ புரத்தில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் சிலைமீது காவி சாயம் பூசி இழிவுபடுத்தும் செயல் நடந்துள்ளது.


சில மாதங்களாகவே பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை சேதப் படுத்து, இழிவுபடுத்துவது போன்ற வன்செயல்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன.


தொடர்ந்து வரும் குற்றச் சம்பவங் களை தொடுத்துப் பார்க்கும்போது தமி ழகத்தை கலவர பூமியாக்கி, சாதி, மதவெறி சக்திகளை அணிதிரட்டி, வெறுப்பு அரசியலை வளர்த்து வரும்  பாஜக, மனுவாதிகளின் தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய அரசியல் முயற்சியின் வெளிப்பாடு என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.


மக்களின் நன்மதிப்பை பெற்று, மறைந்த மகத்தான தலைவர்களின் சிலைகளை அசிங்கப்படுத்துவது, அரசியல் கட்சித் தலைவர்கள் மீது சமூக ஊடகங்கள் வழியாக ஆபாசக் குப்பைகளைக் கொட்டி இழிவுபடுத்துவது, பகுத்தறிவுக் கருத்துக்களை திரித்துக் கூறி உணர்ச்சிக் கொந் தளிப்புகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, சமூக நல்லிணக்கம் பேண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


No comments:

Post a Comment