ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டனர்
லக்னோ அக் 28 சாமியார் ஆட்சியில் நாள்தோறும் பாலியல் வன்கொடு மைகள் சிறுமிகளுக்கு எதிராக தொடர்ந்து நடந்துகொண்டே இருக் கிறது, பாஜக தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அடி மட்டத் தொண்டர்கள் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் சிக்கி வருகின்றனர்.
பிரோசாபாத் மாவட்டத்தின் ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கிண்டல் செய்தும், அநாகரிகமாக பேசுவதையும் வாடிக்கையாக் வைத்திருந்திருக் கிறார்கள்.
இந்த நிலையில் அச்சிறுமி தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் நேரில் சென்று அந்த இளை ஞர்களை காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத் தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மனீஷ் சவுத்ரி யாதவ், சிவ்பால் யாதவ், கவுரவ் சாக் ஆகிய மூவரும் சிறுமியின் வீட்டில் புகுந்து தாயின் கண் முன்பே நெற்றியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இதனால் சிறுமியின் தாயார் பேரதிர்ச்சிக்கு ஆளானதோடு காவல்துறையில் புகாரும் அளித் துள்ளார். இதனை அடுத்து சிறுமியை சுட்டுக்கொன்ற மூவரில் இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் கைதானவர்கள் சில முக்கிய பிர முகர்களின் உறவினர்கள் என்பதால் சிறுமியின் குடும்பத்தினர் மீதே தற் போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போல் செப்டம்பர் 14 ஆம் நாள் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாகி இரண்டுவார சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த மாணவி விவகாரத்தி லும் அந்தக் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதே போல் மேவ் மாவட் டத்திலும் ஒரு பலியல்வன்கொடுமை கொலை நிகழ்ந்துள்ளது.
லக்னோவிற்கு அருகில் உள்ள மேவ் மாவட்டத்தில் ஆள் இல்லாத வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அந்தச்சிறுமி அவர்களை எதிர்த்துப் போராடியதால் வீட்டின் மாடியில் இருந்து 3 கயவர்கள் தூக்கி வீசிவிட்டுச்சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அந்த சிறுமி அசம்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். கடந்த அக் டோபர் 23ம் தேதி நடைபெற்ற இந்த கோர நிகழ்வு நடந்துள்ளது.சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் தாங்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் தனியாக எங்களது மகள் இருப்பதை அறிந்த சிலர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் எங்களது மகள் அவர் களோடு கடுமையாக போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாடியில் வீட்டு மாடிக்கு தூக்கிச் சென்று வீசிவிட்டார்கள் என என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப் பட்ட மூவர் மீதும் பாலியல் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை அதிகாரி சுசில் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுமியின் மருத்துவ அறிக்கையின் பொறுத்து குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச் சராக இருக்கக் கூடிய சாமியார் ஆதித்யநாத் தன் மாநில பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு அரணாக இல்லாமல் குற்றம் புரிந்தவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து வருகிறார் என தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரு கின்றன. மேலும் குற்றவாளிகள் அனை வருமே குறிப்பிட்ட கட்சியின் பிர முகர்களின் துணையோடு வழக்கி லிருந்து தப்பி விடுகின்றனர். சில இடங்களில் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் துணை போவதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகிக்கின் றனர்.
உத்தர பிரதேசத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காணாத மாநில பாஜக அரசு இந்துத்வ கோட்பாடுகளை பரப்பும் வேளை களிலும் மதவாத அரசியலிலுமே ஈடு பட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment