தூங்கு மூஞ்சி பூனையா ‘துக்ளக்?'
கேள்வி: தி.க. தலைவர் கி.வீரமணி முன்புபோல் அதிகமாக அரசியல் அறிக்கைகள் வெளியிடு வதில்லையே, ஏன்?
பதில்: கி.வீரமணி அறிக்கைகள் விட்டால் 2021 இல் ஆபத்து தனக்குத்தான் என்று தெரிந்து, ஸ்டாலின் அவரது பேனாவைப் பிடுங்கி வைத்துக் கொண்டுவிட்டாரோ, என்னவோ!
- ‘துக்ளக்', 4.11.2020, பக்கம் 20
கரோனா ஊரடங்குக் காலகட்டத்திலும் நாள்தோறும் அறிக்கைகள், காணொலி உரைகள் என்று 87 வயதிலும் வீறுகொள் இளைஞராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ‘விடுதலை' வீரர்தான் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
இந்த அக்டோபரில் கூட 29 நாள்களில் 31 அறிக்கைகளை எழுதியிருக்கிறார். அதோடு வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளையும் வரைந்து தள்ளுகிறார். பெரும்பாலான நாள்களில் காணொலிமூலம் கருத்து களை வாரி வழங்கிக் கொண்டுள்ளார். கழகத்தையும் கடந்து பொதுத் தளங்கள் ஏற்பாடு செய்யும் (வெளிநாடு உள்பட) காணொலியிலும் கலந்துகொண்டு வருகிறார்.
இவற்றையெல்லாம் கவனிக்கத் துப்பின்றி தூங்கு மூஞ்சி பூனைகளாக இருந்துகொண்டு வாரப் பத்திரிகை நடத்துவதற்கு வெட்கமில்லையா?
ஒன்றை மட்டும் உருப்போட்டு வைத்திருக்கிறது இந்தக் குருமூர்த்தி உத்திராட்சைப் பூனை!
ஒவ்வொரு இதழிலும் வீரமணி அவர்களைப்பற்றி எதையாவது கிறுக்கி, தன் ஆற்றாமைப் புழுக்கத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற பரிதாபத்தில் இருக்கிறார். வீரமணி ஃபோபியா அவாளின் சிண்டையும், பூணூலையும் பிடித்து உலுக்கு உலுக்கு என்று உலுக்குவது புரிகிறது.
‘விடுதலை' ஆசிரியர் வீரமணி கையில் இருக்கும் பேனா - தந்தை பெரியாரால் கொடுக்கப்பட்டது. அதைப் பிடுங்கிட யாராலும் முடியாது. இன்னும் சொல்லப் போனால், அந்தப் பேனா ஓயாமல் சுழலவேண்டும் என்பதுதான் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அவாவும் - ஆர்வமும்! இந்தச் சிண்டு முடியும் வேலையை வேறு எங்காவது வைத்துக் கொள்ளட்டும் இந்த வேதிய வெங்காயங்கள்!
இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் உண்மையான பல்கலைக் கழக மாணவன்போல ஏராளமான நூல்களைப் படித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
அந்த வகையில், நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூல்கள் பவனி வர இருக்கின்றன. அப்பொழுது உங்களின் பதற்றமும், குருதிக் கொதிப்பும் உச்சத்தை அடையும் - தயாராக இருங்கள்!
No comments:
Post a Comment