மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை பணியை நிறுத்திய மத்திய மாநில அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை பணியை நிறுத்திய மத்திய மாநில அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


சென்னை, நவ. 11- சென்னை துறை முகம் வழியாக, வெளி நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி நடக்கிறது. இதற்கான கன்டெய்னர் லாரிகளை இரவு நேரங்களில் மட் டுமே நகருக்குள் அனுமதிப்பதால், அதிக சரக்குகளை கையாள முடியாத நிலை ஏற்பட்டது.


துறைமுகத்தின் வருவாயும் பாதிக் கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர் வாக துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இதற்கான பணிகள் 1,815 கோடி மதிப்பில் கடந்த 2009இல், திமுக ஆட்சியில் துவங்கின. முதற் கட்டமாக, மதுரவாயல் - கோயம்பேடு இடையே, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்தியிலும், கோயம்பேடு முதல் சேத்துப்பட்டு வரை, கூவம் ஆற்றின் கரைகளை ஒட்டியும் தூண் கள் அமைக்கும் பணிகள் நடந்தன.


இந்நிலையில், இந்த தூண்களால் கூவத்தின் நீரோட்டம் பாதிக்கும் எனக்கூறி, 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, திட்டத்திற்கான அனு மதியை ரத்து செய்தது. ஜெயலலிதா மறைவிற்கு பின், 2016இல் இத்திட் டத்திற்கு மீண்டும் அனுமதி வழங் கப்பட்டது. ஆனால் இதுவரை பணி தொடங்கப்படவில்லை. 


இந்நிலையில், பறக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி யும்,  மத்திய மாநில அரசுகளை கண் டித்தும் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில்,  மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிர மணியன் தலைமையில் மதுரவாயலில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (10.11.2020) நடந்தது.


இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சட்ட மன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலா ளர்கள் காரம்பாக்கம் கணபதி, நொளம்பூர் ராஜன் மற்றும் ஆயிரக் கணக்கான திமுக வினர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment