பா.ஜ.க.வுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

பா.ஜ.க.வுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு அனுமதிக்காமல் வேல் யாத்திரையை எப்படி நடத்த முடியும்?


சென்னை, நவ. 11- தமிழக அரசு அனு மதி அளிக்காத நிலையில்  எப்படி வேல் யாத்திரை நடத்த முடியும் என பாஜவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழக பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாக ராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்பர். எத்தனை வாகனங்கள் கலந்து கொள்ளும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் காவல் துறைக்கு விண்ணப்பம் அளிக்க பா.ஜ.க. தரப்புக்கு அறிவுறுத்தியது.


இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் நேற்று (10.11.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாரா யண், காவல்துறை டிஜிபி தரப்பு அறிக்கையை தாக்கல் செய்து வாதிட் டார். அப்போது, கடந்த 6, 8 மற்றும் 9ஆம் தேதி பா.ஜ.க.வினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூ ரில் யாத்திரை நடத்தினர். பா.ஜ.க. தலைவர் முருகன் உள்பட நிர்வாகிகள் தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை. யாத்திரையால் போக்குவரத்து பாதிக் கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளானதா கவும், யாத்திரையில் பங்கேற்ற நிர் வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது கோயில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. மத்தியில் ஆளும் பா.ஜ.க. பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளது. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாக கூறி விட்டு, அதை மீறியுள்ளதாகவும் தெரிவித்தார். பா.ஜ.க. தரப்பில் வழக் குரைஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், எம்.பாஸ்கர் ஆஜராகி, 38 கோயில் களில் 30 பேருடன் 18 வாகனங்களில் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி கடந்த 9ஆம் தேதி விண்ணப் பித்ததாக குறிப்பிட்டனர்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? கடந்த மூன்று நாட்களாக கட்சித் தலைவர்கள் கூடியுள்ளனர். கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்தி செல்கிறார். இது ஆயுத சட்டப்படி குற்றம் எனவும் சுட்டிக்காட்டினர். உடனே, பா.ஜ.க. தரப்பு வழக்குரைஞர், அது மரத்தால் செய்த வேல் எனவும், யாத்திரைக்கு அனுமதி கோரிய விண் ணப்பத்தை பரிசீலித்து அமைதியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என் றார். நீதிபதிகள், தேவர் ஜெயந்தியை குறிப்பிட்டு, அனைவருக்கும் பொது வாகவே கரோனா விதிகளை அமல் படுத்த வேண்டும் என அரசுக்கு அறி வுறுத்தினார்.


தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், பா.ஜ.க. வினர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த காவல்துறை இயக்குனர், சம் பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பா ளர்களையும், காவல் ஆணையர்க ளையும் அணுக அறிவுறுத்தியுள்ள தாகவும், அதன்படி, ஓசூரில் யாத்தி ரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட் டதை எதிர்த்து வழக்கு தொடர பா.ஜ.க.வுக்கு அனுமதியளித்ததுடன், வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்தனர். கரோனா விதிகளை கண்டிப்புடன் அனைத்து கட்சி கூட் டங்கள், மத கூட்டங்களுக்கும் பார பட்சமில்லாமல் அமல்படுத்த அதிகாரி களுக்கு அறிவுறுத்த அரசுக்கு உத்தர விட்ட நீதிபதிகள், நவம்பர் 16ஆம் தேதி வரை மத நிகழ்ச் சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில ளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம் பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment