மாடு விரும்பாத ஆன்லைன் வகுப்பு: மாடுகள் நேரடியாக மனிதர்களோடு பழகுவதையே பெரிதும் விரும்புகின்றன - ஆய்வு முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

மாடு விரும்பாத ஆன்லைன் வகுப்பு: மாடுகள் நேரடியாக மனிதர்களோடு பழகுவதையே பெரிதும் விரும்புகின்றன - ஆய்வு முடிவுகள்


கோவிட் 19  பெரும்பாலான நடவடிக்கையிலிருந்து மனிதர்களை  தனித்து  வைத்துவிட்டது,  பெரும்பாலான மனிதர்கள் ஆன்லைன் மூலமே தங்களின் பணிகளை மேற்கொள்கின்றனர்.   நேருக்கு நேர் இருந்து பழகும் போது பெற்ற அனுபவம் இதில் வேறாக உள்ளது, இதனால் மனச்சோர்வு உள்ளிட்ட சில சிக்கல்களுக்கு ஒருசிலர் ஆட்படுகின்றனர். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல:  பசுக்க ளும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல என்று தெரிய வந்துள்ளது.


 பெரும்பாலும் வீட்டு விலங்குகளான ஆடு மாடு போன்றவற்றோடு மனிதர்களின் செயல்பாடுகளால் அதன் அன்றாட நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் தெரியும். அதே நேரத்தில் பசுமாடுகளுக்குப் பாடல் இசைப்பது, இனி மையான இசைகளை அவைகள் இருக்கும் பகுதிகளில் இசைப்பது போன்றவையும் பிடித்தமானவையாகும்.


 இது தொடர்பாக ஆஸ்திரியா கால்நடைகள் பல் கலைக்கழக பேராசிரியர் அன்னிகா லங்கே  'ஃப்ரண்டியர் இன்  பிசியோலஜி' என்ற இதழில் வெளியிட்ட ஆய்வறிக் கையில் கூறியுள்ளதாவது:


 “மாடுகளுக்குப் பரிச்சயமான குரல்களைப் பதிவு செய்து அவைகளைக் கேட்கவைக்கும் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாடுகளுக்குப் பதிவு செய் யப்பட்ட இசையை இடைவெளி விட்டுக் கேட்கவைப்பதன் மூலம் பல முக்கிய அறிவியல் காரணிகளைக் கண்டறிந் துள்ளோம்.  இசையைக் கேட்கும் மாடுகளை விட மனிதர் களுடன் நேரடியாக அவர்களின் குரல் மற்றும் உடல் தொடுதல் தொடர்பான ஈர்ப்புக் காரணிகளோடு உள்ள மாடுகள் புத்துணர்ச்சியோடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


 எங்களது ஆய்வு முடிவுகளின்படி நேரடியாக மனிதர்களோடு தொடர்புடைய கால்நடைகள் பொதுவான ஓர் அரவணைப்பை  உணருகின்றன.  மற்றவை  இசையைக் கேட்பதிலும் காணொலிகள் மூலம் பார்ப்பதால் அவற்றின் உடல்நிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்படவில்லை.


 இறுதியாக எங்களுக்குக் கிடைத்த முடிவுகளின் படி மனிதர்களோடு பழகி வந்த மாடுகள் ஒருவகையில்  தங்களுக்கான பாதுகாப்பையும் அரவணைப்பையும்   நன்கு உணர்ந்து கொள்கின்றன. மேலும் குறிப்பிட்ட நபர் தொடர்ந்து மாடுகளோடு பழகும் போது அம்மாடுகள் எவ்வித அச்ச உணர்வும் இன்றி அன்றாடம் நாட்களைக் கழிக்கின்றன.  அதே நேரத்தில் மனிதர்கள் தொடர்பில்லா மல்  காணொலிகள், இசைத்தட்டுகள்  மற்றும் இயந்திரப் பராமரிப்பு போன்றவற்றோடு வாழும் மாடுகள் ஒரு வித அச்ச உணர்வோடும், தனித்து இருக்கும் போது ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மையைத் தொடர்ந்து உணருகின்றன. இதனால் அவற்றின்  உடலியல் மாற்றங்கள் தீவனம் எடுத்துக்கொள்ளும் அளவிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.


  மனிதர்களோடு  பழகும் நேரத்தில்  ஏற்படும்  உடலியல் மாற்றங்கள், இசைக் காணொலிகளைக் காணும் போது ஏற்படும் மாற்றங்களை நவீன கருவிகள் கொண்டு சோதனை செய்த போது நேரடியாக மனிதர்களோடு பழகும் மாடுகளிடம் நல்ல பல மாற்றங்கள் தெரியவந்து உள்ளன. இந்த ஆய்வு களின் மூலம் மாடுகளின் வளர்ச்சி, பால் கொடுக்கும் தண்மை, இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளின் இறைச்சியில் சேரும் தனிமங்கள் போன்றவை அதிகமாகப் பெறுவதற்கான வழிமுறைகள் கிடைத்துள் ளன" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 


No comments:

Post a Comment