தானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

தானே சரியாகிவிடும் என்ற நினைப்பு வேண்டாம்

நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்



கரோனாத்  தொற்று காலத்தில்  உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த மேற் கொண்ட நடவடிக்கைகளின் மூலம் பல புதிய மாற்றங்களைக் கண்டறிந்துள்ளனர்.


மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவும் போது உடலில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல் குறை பாடுத் தொடர்ந்து பலருக்கு ஏற்படுவது ஆபத்தான ஒன்றாகப் பார்க்கப் படுகிறது.


 இது தொடர்பாக 'த லென்செட் 'ஆய்வு இதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை ஒன் றில் கூறப்பட்டுள்ளதாவது :  தற்போது நாம் முதன்மையாகவும், அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் இருக்கிறோம்.


ஆய்வுகளின் படி நோய்த் தொற்று பரவல் என்பது இளையவர்களிடையே அதிகம் பரவும் அப்படிப் பரவும் போது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் வேகமாகக் குறையும் ஆபத்து உள்ளது.


இது தொடர்ந்து  அனைத்து பகுதிக்கும் பரவும். இதை நாம் பல நாடுகளின் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் போது கண்டுள்ளோம். அதே நேரத்தில் கரோனா தொற்றுப் பரவல் போன்று காற்றின் மூலம் பரவும் இதர வைரஸ்களின் தாக்கம் குறித் தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் நோய்ப் பரவல் காலத்தில் மனித உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக் கைகளை விரைந்து எடுக்க முடியும்


தற்போது நாம் நோய்த் தொற்று ஏற்பட்ட பிறகு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து அதிகம் பேசிக்கொண்டு இருக்கி றோம். கோவிட் 19 இதற்குப் பெரிய எடுத் துக்காட்டு ஆகும்.


ஆய்வாளர்கள் இது குறித்து த் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் போது, “கட்டுக் கடங்காத தொற்றுப் பரவல் இளையோர் களிடையே ஏற்படும் போது நல்ல உடல் நிலையிலிருந்த போதும் அவர்களின் உட லில் நோயெதிர்ப்பு ஆற்றல் மெல்ல மெல் லக் குறைந்து அதிக ஆபத்தை உருவாக்கி விடும். பல நாடுகளில் தனிமைப்படுத்தப் பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இதன்மூலம் பெரும்பா லான மக்கள் தொகை பாதிப்பிற்கு உள்ளா கிறது.


நோயெதிர்ப்பு ஆற்றலை நாம் பெருக் கிக்கொள்ள மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கூறவேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிக முள்ள ஒரு சமூகத்தை நாம் உருவாக்க முடியும்.


முக்கியமாக சார்ஸ் கோவ் 2 போன்ற நோய்கள் இயற்கையாகப் பரவும் குண முடை யவைரஸ்களால் உருவாகிறது, இந்த வகை வைரஸ்கள் தொடர்ந்து பரவும் போது மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் நாம் பாடம் கற்றுக்கொண்டோம். இருப்பி னும் கோவிட் 19 காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம் பலனளிக்கவில்லை.


நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ள மக்கள் வாழும் பகுதிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரண மாகத் தடுப்பு மருந்துகள் விரைவாகக் கண் டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


ஒருவேளை தடுப்பு மருந்துகள் கண் டறியப்பட்டால் விரைவாக அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்லவேண்டும்.


அதே நேரத்தில் இயற்கையாக ஏற்படும் சளித்தொல்லை உள்ளிட்ட வைரஸ் தொற் றின் காரணமாக உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் மெல்ல மெல்லக் குறைந்து வரும் நிலையில் புதிய தொற்று நோய்களின் பாதிப்பு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.


இதனால் மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து சுழற்சி முறையில் வழங்கிக் கொண்டு இருக்கவேண்டிய தேவை ஏற் படுகிறது.


இன்றுவரை நீண்ட கால கோவிட் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களுக் குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணி யாளர்கள் விரைவில் தொற்றுக்கு ஆளாகி மரணிக்கும் விகிதம் ஏன் அதிகரிக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது" என்று அந்த ஆய்வு ஏட் டில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment