மத்திய பாஜக அரசின் ஹிந்தி மொழி வெறி! திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 21, 2020

மத்திய பாஜக அரசின் ஹிந்தி மொழி வெறி! திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,நவ.21 தி.மு.க. தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கி லத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து  ஹிந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அது தொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற  மொழி யாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்து கிறது.


தி.மு.கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தொடர்பு டைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. 


பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப் பாட்டைப் பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு, இந்தியைத் திணிப்பதில் பிடி வாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக் கிறேன்.


அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத் திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பா.ஜ.க அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment