சென்னை,நவ.6 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி யுள்ளது. நேற்று சில இடங்களில் மழை பெய்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் 3 நாள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கன மழையும், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் கோவை, நீலகிரி, திருப்பூர், மாவட்டங்களில் மலை பகுதிகளில் கனமழையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யும்.
No comments:
Post a Comment