சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, நவ. 10- மருத்துவ மேற்படிப்பு களில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண் டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது முக நூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,


 மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு - மிக வும்  காலதாமதமாக இப்போது அ.தி. மு.க. அரசு ஆணை வெளியிட்டு இருக்கி றது. சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அ.தி.மு.க. அரசிடம் ஒவ் வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமை யைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது.


இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளி யிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உள் இடஒதுக்கீடு 69 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அ.தி.மு.க. அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள் இடஒதுக்கீடு என்று அறிவித்து 69 விழுக்காடு இட ஒதுக்கீட் டைக் காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடி யாத துரோகம். ஆகவே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண் டும் என்று முதலமைச்சர் திரு. பழனி சாமியை வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment