கடவுள் சக்தி இதுதானா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 10, 2020

கடவுள் சக்தி இதுதானா

கடவுள் சக்தி இதுதானா? கோவில் பல்லக்கில்  வெள்ளித் தகடு திருட்டு


காஞ்சிபுரம், நவ. 10- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பல்லக் கிலிருந்து வெள்ளி தகடு திருடப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் நகைகள் திருடு போனதாக பக்தர்கள் தொடர்ச்சியாக இந்து அறநிலையத் துறையிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கோவிலில் இருந்த  வெள்ளி பல்லக்கில் இருந்த வெள்ளி தகடுகள் பெயர்க்கப் பட்டு வெறும் பலகை மட்டுமே இருந்ததை கண்டு நகை சரிபார்ப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது தொடர்பாக இந்து அறநிலையத் துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே ஏகாம்பரநாதர் திருக்கோவில் சோமஸ்கந்தர் சிலை செய்வதில் தங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment