மதுரை, நவ. 7- தமிழகத்தில் ஏற்கெனவே 92 பாதுகாக்கப் பட்ட புராதன இடங்கள் உள்ள நிலையில், மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டுபிடிக் கப் பட்டுள்ளதாக உயர் நீதிமன் றத்தில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கீழடி, கொந்தகை, சிவ களை, ஆதிச்சநல்லூர், கொடு மணல், தாமிரபரணி ஆற்றுப் படுகை கிராமங்களில் அக ழாய்வு நடத்தக்கோரி எழுத் தாளர் காமராஜ், மதுரை சம ணர் படுகை உள்ளிட்ட பழங் கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய் தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய தொல்லியல் துறை தரப்பில், ஆதிச்சநல் லூர் அகழ்வாய்வில் கண் டெடுக்கப்பட்ட பொருட் களை கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்திய போது, அந்த பொருட்கள் கிமு 696 முதல் கிமு 540 வரை மற்றும் கிமு 806 முதல் கிமு 906 ஆண்டுக்கு உட்பட்டது எனத் தெரிகிறது. ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி அக ழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின் றன. விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
கொடுமணல் அகழாய் வில் எடுக்கப்பட்ட 10 பொருட் கள் கார்பன் டேட்டிங் பரி சோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத் துக்கள் கிடைக்கப் பெறாத நிலையில், முதன்முறையாக கொடுமணல் அகழாய்வில் அ,ஆ,இ,ஈ என்ற நெடில் எழுத் துக்கள் கிடைத்துள்ளன.
இதுவரை 11 ஆயிரம் கல் வெட்டுகள் படிவம் எடுக்கப் பட்டுள்ளன. தமிழ் கல்வெட் டுகளில் பல 15 அடி உயரத் துக்கு மேல் இருப்பதால் அவற்றை படிமம் செய்வதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக் கப்பட்டு வருகின்றன. தமிழ கத்தில் பாதுகாக்கப்பட்ட புரா தன பகுதிகளாக 92 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 54 இடங் கள் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த 12 பொருட்களையும், அதன் வயதை அறியும் கார் பன் டேட்டிங் சோதனைக் காக அமெரிக்காவின் புளோ ரிடா மாகாணத்துக்கு 10 நாளில் அனுப்ப வேண்டும். இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
மதுரை யானை மலை சமண சமய அடையாளமாக பார்க்கப்படுகிறது. அங்கு புதிதாக, சிமெண்டால் ஆன வழிபாட்டு அடையாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. அதை அகற்றவும், பழங்கால சின்னங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை டிசம்பர் 7-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment