திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றிய ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், கல்வி அறக்கட்டளை மூலம் பல்வேறு மாணவர்களுக்கு உதவி புரிந்த ரெ.சுதந்திரமணி மாரடைப்பால் 6.11.2020 அன்று மறைவுற்றார். இந்நிலையில், ஆதிச்சபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற கழகப் பொதுச் செயலார் இரா.ஜெயக்குமார் சுதந்திரமணி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வி.புஷ்பநாதன் உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனுதர்ம சாஸ்திரத்தின் நூல் நகல் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டு, பரப்புரை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment