ஒற்றைப் பத்தி - அவர்தான் வி.பி.சிங்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

ஒற்றைப் பத்தி - அவர்தான் வி.பி.சிங்!


நவம்பர் 7, அக்டோபர் புரட்சியை நினைவுகூரும் நாள். இந்தியத் துணைக் கண் டத்தைப் பொருத்தவரை - நவம்பர் 7 மிக முக்கியமான வர லாற்றுச் சிறப்புக்குரியது (1990).


ஆம்! இந்நாளில்தான் (1990) இந்தியத் துணைக் கண்டத்தில் வாராதுவந்த மாமணியாம் - அரசக் குடும்பத்தில் மலர்ந்த விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) நாடாளுமன்றத்தில் அறிவித்த நான்கு வகையான கொள்கைப் பிரகடனத்திற்குரிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள்.


1990 ஆகஸ்ட் 7 ஆம் நாள்; இந்திய மக்கள் தொகையில் 52 விழுக்காட்டையுடைய (மண் டல் அறிக்கையில் கண்டுள்ள படி) மக்களுக்கு முதன் முதலாக மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங்  அவர்களால் அறிவிக்கப் பட்டது.


ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது சமூகநீதிக்கு - இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பது எளிய பாலபாடம்!


வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு அதுவரை வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த பி.ஜே.பி. - மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் கொண்டு வந்த நிலையில், அச்சமூகநீதி ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் ஆதரவை விலக் கிக் கொண்டது.


இந்த நிலையில், பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நாடாளு மன்றத்தில் தன் பெரும்பான் மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


ஆம், இதே நாளில் (7.11.1990) அன்று அதற்கான தீர்மா னத்தை முன்மொழிந்தபோது, கீழ்க்கண்ட நான்கு அம்சங் களை முன்வைத்தார்.



  1. தனி மனிதனின் மத நம்பிக்கை, அரசமைப்புச் சட் டத்தைவிட மேலானதா? அல் லது அரசமைப்புச் சட்டம் உரு வாக்கியுள்ள அமைப்பைவிட மேலானதா?

  2. இந்திய நாட்டில் மத ரீதியாக மக்கள் பிளவுபட வேண்டுமா?

  3. அரசியலில் மதம் கலப் பது விரும்பத்தக்கதா?

  4. இந்த நாட்டின் உணர்வு பூர்வமான ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?


இந்த நான்மணிக்கடிகை தான் சமூகநீதிக் காவலர் பிரத மர் வி.பி.சிங் அவர்களால் அணி மலராக வைக்கப்பட் டவை.


வி.பி.சிங் தலைமையில் அமைந்த ஆட்சியை பி.ஜே.பி., சங் பரிவார் கவிழ்த்திருக்கலாம்.


ஆனால், வி.பி.சிங் எனும் மாமனிதரின் இந்த நான்கு அம்சங்களும் நாடு உள்ளவரை - காடு உள்ளவரை - கடல் உள்ளவரை  நிலைத்து அவர் வாழ்ந்துகொண்டேதான் இருப்பார். அவர் கூறிய அந்த நான்கு மணிகளின் ஓசையும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்பது வரலாற்றுக் கல்வெட்டு!


 - மயிலாடன்


No comments:

Post a Comment