சிதறிக்கிடக்கும் உலகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

சிதறிக்கிடக்கும் உலகங்கள்

அதீத வெப்பமுள்ள புதிய உலகத்தை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்


அய்ரோப்பிய வானியல் கழகம் விண் ணில் உள்ள விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் குறித்து நடத்திய ஆய்வில் மிகப்பெரிய அதீத வெப்பமுள்ள கோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இக்கோளில் அதீத வெப்ப நிலையில் உருகும் உலோ கங்கள் கூட திரவ நிலையில்  உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.


தரையிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் உள்ள விண்மீன்களைச் சுற்றித்திரியும் கோள்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சியோப்ஸ் என்ற விண் வெளி ஆய்வுத் தொலைநோக்கியின் உதவி யோடு மிகப்பெரிய அடர்த்தியான காற்று மண்டலத்தைக் கொண்ட கோள் ஒன்று தூரத்து விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது,


  துலா விண்மீன் கூட்டத்தில் உள்ள வாஸ்ப்-189 பி என்ற விண்மீன் நம்மிட மிருந்து 322 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இதனை 3 நாட்களுக்கு  ஒருமுறை மிகப்பெரிய திடக்கோள் ஒன்று சுற்றி வருகிறது.  இதைப் பூமியிலிருந்து அவ்வ ளவு எளிதாகக் கண்டு பிடிக்க இயல வில்லை. இருப்பினும் நவீன தெர்மல் தொலை நோக்கி மற்றும் கதிரியக்கத் தொலைநோக்கிகள் மூலம் இக்கோளைக் கண்டறிந்துள்ளனர்.


பூமி மற்றும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிறுவப் பட்ட இரண்டு தொலை நோக்கிகளது உதவியோடு பெறப்பட்ட தகவல்களைக் கவனமாக ஆய்வு செய் தனர்.


அப்போது        வாஸ்ப் விண்மீனிடமிருந்து மிகவும் சிறிய அளவினாலான ஒளித்தடங் கல் ஏற்படுவதைக் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் அந்த ஒளித்தடங்கள் எத னால் ஏற்படுகின்றன என்று ஆய்வு செய்தனர்.


2009 -ஆம் ஆண்டு முதல் கெப்ளர் தொலைநோக்கி இது போன்ற பல கோள் களைத் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டு  இருக்கிறது.  ஆனால் இது  கோளா அல்லது வேறு ஏதேனும் விண்வெளிப் பொருளா என்று கண்ட றியும்  பணியை அய்ரோப்பிய விண் வெளிக் கழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தது.


பூமிக்கு வெளியே நமது பூமியைப் போன்ற கோள்களைக் கண்டறியும் ஆய் வினை (எக்ஸோபிளானட்) 1995 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டு வானியலாளர் மைக் கேல் மேயர் மற்றும் டைடியர் குயிலேஸ் இருவரும் இணைந்து ஆய்வு செய்ததன் மூலம் 2010ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றனர். குயிலேஸ் பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரை களை "ஜேர்னல் அஸ்ட்ரோனமி அண்ட் அஸ்ட்ரோபிஸிக்ஸ்" என்ற இதழில் வெளி யிட்டுள்ளார்.


இதனடிப்படையில் செப்டம்பர் 29 அன்று வெளிவந்த இதழோடு சேர்த்து இதுவரை 4,284 கோள்கள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளன. இதை நாசாவும் உறுதிப் படுத்தி இதில் தொடர்புள்ள அனைத்து வானியல் ஆய்வாளர்களையும் பாராட்டி உள்ளது.  மிகப்பெரிய கோள் 1330 என்று அழைக் கப் படும் ஒரு கோள் முழுக்க முழுக்க பனிக் கட்டியால் உறைந்து காணப்படுகிறது. நெப்டி யூன் போன்ற வாயுக் கோளான  இது நமது பூமியைப் போல் 1320 மடங்கு பெரியது ஆகும்.


இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கோள் களில் பூமியைப் போன்ற நிறையைக் கொண்ட கோள்களை நவீன முறையில் ஆய்வு செய்துகொண்டு இருக்கின்றனர். இதில் மிகவும் குறைவான எண்ணிக்கை யிலேயே நமது பூமியைப் போன்று நீரால் நிரம்பிய கோள்கள் நமக்குக் கிடைத்துள் ளன. இங்கு உயிர்கள் இருக்குமா என்பது குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment