உடல் வெப்பநிலையை அறியும் காமிராவை நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது
பின்லாந்தைச் சேர்ந்த பிரபல நோக்கியா நிறுவனம் உடல் வெப்பத்தைக் கண்டறியும் தெர்மல் படக்கருவியைக் கண்டறிந்துள்ளது. இவ்வகைக் காமிரா காணொலிப் பதிவு மற்றும் பதிவு களைப் பகுப்பாயும் திறன் கொண்டவை மற்றும் மாஸ்க் அணியாதவர்களை அடையாளம் காட்டும் திறன் மிக்கது மாகும்.
கோவிட்-19 உலகப் பொருளாதாரத்தைச் சின்னாபின் னமாக்கி வைத்துள்ளது. அதே நேரத்தில் நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும் கரோனா வைரஸ் தொடர்பான நோய் அறிகுறியை எளிதில் அடையாளம் கண்டுகொள் ளக்கூடியதாக இருக்கவேண்டியது கட்டாயமாகி உள்ளது.
சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் நீண்ட ஊரடங்கிற்குப் பிறகு திறக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சென்னையில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை தொழிற்சாலையில் இரண்டு மாதங்களில் 20,000 பேர்களின் உடல் வெப்ப நிலை தானியங்கிப் பரிசோதனை(ஸ்கிரீனிங்) செய்யப் பட்டுள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனம் அமைத்துள்ள படக்கருவி மூலம் உடல் வெப்பம் மற்றும் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் யார் யார் என்று பாதுகாப்பு அதிகாரிக்கு இந்தப் படக்கருவி தனி வட்டமிட்டுக் கட்டிவிடும்.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித்ஷா செய்தியாளரிடம் பேசும் போது, “இந்தியச் சட்டவிதிகளின் படி இந்தப் படக்கருவிகள் தொழிலா ளர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும். நிறுவனத்தின் பல பகுதிகளில் இது பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அறை யிலிருந்து அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் ஓர் அறையிலிருந்து அங்குள்ள மானிட்டர் மூலம் கண் காணித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த நிறுவனத்தில் சோதனை மற்றும் மேம்படுத்துதல் பிரிவு பொறியியல் வல்லுநர்கள் இணைந்து இந்த படக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் மேம்படுத் தப்பட்ட நவீன தொழில் நுட்பமாகும். இவ்வகை படக் கருவிகள் அமெரிக்க அய்க்கிய நாடு மற்றும் ஒரு சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது இங்கும் பள்ளி மற்றும் அரசு அலு வலகங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்காலத்தில் பாதுகாப்புக் கருவிகள் மேம்பாடு, தொழிற்சாலைகளில் கருவிகளின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து மேம் படுத்தப்பட்ட படக்கருவிகளை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்" என்று கூறினார்.
No comments:
Post a Comment