கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியில்லாமல் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு மூச் சிறைப்பு நோய் பாதிப்பு உண்டாகும்.
மன அழுத்தம் மற்றும் அளவிற்கு மீறிய கவலைகள் போன்றவற்றால் கர்ப் பிணிப் பெண்கள் பீடிக்கப்படுவாரேயா னால், அவருக்கு பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் வலுவிழந்து விடும் என்றும், இதனால் ஆஸ்துமா நோய் 10 வயதிற்கு உள்ளாகவே ஏற்படும் வாய்ப் புள்ளதாக மருத்துவ ஆய் வாளர்கள் கூறி யுள்ளனர்.
'தராஸ்' மருத்துவ ஆய்வு இதழில் அக்டோபர் மாதம் நெதர்லாந்தில் உள்ள எராஸ்முஸ் மருத்துவப் பல்கலைக் கழ கம் வெளியிட்டுள்ள சுவாச உறுப்புகள் செயல்பாடு தொடர்பான ஓர் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, “கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களின் வயிற்றில் உள்ள கருக்களின் சுவாச உறுப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள் ளப் பட்டது,
இதில் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, மரபு வழி நோய் போன்றவை குறித்து நடத்தப் பட்ட ஆய்வுகளில், ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் பல குழந்தைகளுக்குச் சுவாசம் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது எதனால் ஏற்படு கிறது என்று ஆய்வு செய்யக் குழந்தை களின் தாய் மார்களை அழைத்து அவர் களிடம் பல கேள்விகளை வைத்தோம்.
மேலும் சுவாச உறுப்புத்தொடர்பான சிக்கல்களை பரிசோதனை செய்ய ஆரம்ப காலம், நடுநிலை, இறுதிக்கட்ட கர்ப்பிணித் தாய்மார்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டது.
ஆய்வில் கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களுமே பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள்.
இதனடிப்படையில் இவர்களின் தொடர் பரிசோதனை முடிவுகளில் உளவி யல் தொடர்பான அழுத்தம் மற்றும் நெருக்கடி, கவலை போன்ற பிரச்சினை உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக் கும் குழந்தைகளின் சுவாச உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் 3 அல்லது 6 மாதங்களில் தெரிய ஆரம்பிக்கிறது,
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 362 கர்ப்பிணிப் பெண்களில் 167 பேர் மருத்துவ ஆய்வுக்காலங்களில் மனச் சோர்வில் இருந்தனர்.
இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 10 வயது ஆகும் போதே ஆஸ்துமா உள் ளிட்ட சில சுவாச உறுப்புகள் தொடர்பான நோய்க ளுக்கு ஆளாகின்றனர்.
மனச்சோர்விற்கு ஆளாகாத பெண் களை விட, மன அழுத்தம் மற்றும் தேவை யற்ற கவலைகளில் இருந்த பெண்களுக் குப் பிறந்த குழந்தைகள் 45 முதல் 92 சதவீதம் ஆஸ்துமா பாதிப்பிற்கு ஆளா கும் வேகம் அதிகரித்துள்ளது.
இதுதவிர குழந்தைகளுக்கு மூச்சுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவ தற்கு, கர்ப்ப காலத்தில் புகைபிடித்தலும், பொறாமைக் குணமும், தகுந்த வயதில் கர்ப்பமாகாமல் போவதும் பிறக்கும் குழந்தைக்கு சுவாச உறுப்புகளில் நோய் ஏற்பட பிற காரணங்களாக உள் ளன.
கர்ப்ப காலத்தில் ஆண் இணையின் (கணவன் அல்லது ஆண் நண்பர்) மன உளைச்சல் அல்லது கவலைகள் குழந் தையைப் பாதிப்பது இல்லை.
இதற்கு முன்பான ஆய்வுகளும் கிட்டத்தட்ட கர்ப்ப காலக் கவலைகள் வயிற்றில் வளரும்கருவின் வளர்ச்சியில் பாதிப்படைய வைக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இம்முறை சுவாச உறுப்புகளின் பாதிப்பு குறித்த காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன.
குழந்தைகளின் ஆரோக்கியம் பெற் றோர்களின் வாழ்க்கைச்சூழல், உடல் ஆரோக்கியம், மனவளம் உள்ளிட்ட சில காரணங்களோடு சமூகத்தில் கர்ப்பிணி களோடு பழகுபவர்களின் நடவடிக்கை களும் வயிற்றில் வளரும் கருவில் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத் தும்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் மரபணு பரிமாற்றம் என்ற ஒரு கொள்கை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் மரபணு தவிர்த்து இதர காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய கர்ப்பிணிப் பெண் களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுசெய் தோம். எங்கள் ஆய்வின் முடிவுகள் இனி சுவாசம் தொடர்பான நோய்கள் குறித்த புதிய பார்வையைத் தோற்றுவிக்கும் என்று அந்த அறிவியல் ஆய்வுக்கட்டு ரையில் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment