தொடக்கப்புள்ளி
பெரும்பாலான கருத்துக் கணிப்புப்படி பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வராது - காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி வெற்றி பெறும் என்பது இனிக்கும் செய்தி.
மதவாத சக்திகளுக்கு மரண அடி தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்!
மாஸ்' - மாசு!
தீபாவளி - பல மாநிலங்கள் பட்டாசு வெடிப்புக்குத் தடை - தமிழ்நாட்டில் 2 மணிநேரம் அனுமதி.
பொதுவாகப் பண்டிகைகள் அறிவுக்கும், பொருளுக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் கேடாகவே இருக்கின்றன - விநாயகர் சதுர்த்தி என்ற போர்வையில் நீர் நிலைகளில் விநாயகர் பொம்மைகளை மூழ்கடித்து, நீர் மாசுவை ஏற்படுத்துவதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்.
மாயமோ மாயம்!
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் - வெள்ளிப் பல்லாக்கில் 2 கிலோ வெள்ளி மாயம்!
தேய்மானம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள். இனிமேல் ''மாயங்கள்'' மேலும் அதிகமாகும்.
நல்ல தகவல்கள் தேவை!
நாள்தோறும் இருமுறை பல் துலக்கினால் வாய் நோய்களைத் தவிர்க்கலாம்: - டாக்டர் விமலா, பல் மருத்துவமனை முதல்வர். இதுபோன்ற தேவையான தகவல்களை மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுவது தொடரவேண்டும்.
வலைதளமா - கொலைக் களமா?
சமூக வலைதளம்மூலம் சிறுமிகளுக்குக் குறி வைப்பு - 3 பேர் கும்பல் கைது.
சமூக வலை தளம் - கொலைக் களமாக மாறி வருவதற்கு உரிய வகையில் முடிவு தேவை.
புகார் கொடுத்தால் ஃபேக் அய்.டி. - ஒன்றும் செய்ய முடியாது என்று 'சைபர் கிரைம்' கூசாமல் சொல்லி விடுகிறது. விஞ்ஞான யுகத்தில் இதுதான் பதிலா?
ஈரம் காய்வதற்குள்...
நெய்வேலி காவல் நிலையத்தில் சிறையில் இருந்த செல்வ முருகன் உயிரிழப்பு!
பாதுகாப்பான இடத்திலேயே இந்தப் பரிதாபம்! ஏற்கெனவே சாத்தான்குளம் சங்கதியின் ஈரம் காய்வதற்குள் இன்னொரு நெய்வேலியா?
காவி'யும் - காக்கியும்!'
இராணிப்பேட்டை - திருவலம் பகுதி சர்வமங்களா பீடாதிபதி சாந்தா சுவாமிகள் ரூ.45 லட்சம் பண மோசடி வழக்கில் கைது.
''காவி'' மோசடிக்கு ஒரு கவசமாக இருக்கிறது என்பதைக் ''காக்கிகள்'' புரிந்து கொண்டது வரவேற்கத்தக்கதே!
அங்கேதானே இருக்கிறது அரசியல்!
முருகன் கோவில் இல்லாத இடங்களில் வேல் யாத்திரை ஏன்? பா.ஜ.க. தரப்பை நோக்கி உயர்நீதிமன்றம் கேள்வி.
அங்கேதானே இருக்கிறது அரசியல் - அதை எப்படி பா.ஜ.க. வெளிப்படையாகச் சொல்லும்?
No comments:
Post a Comment