லக்னோ, நவ.8 உத்தரப்பிரதேசத்தில் கொலை, கொள்ளை, வன்கொடுமை, பாலியல் வன்முறைகள் என அம்மாநிலமே குற்றமயமாகி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே 2,204 கொலைகள் நடந்துள்ளன. அதேபோல், 2020 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 2,032 கொலைகளும் நடந்துள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று குற்றம் செய்வதற்கான விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு விலைபட்டியல் வைத்திருப்பது போன்று, யாரையாவது அச்சுறுத்த ரூ. 1000, அடிக்க ரூ.5,000, தாக்கி காயப்படுத்த ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 எனக் குற்றம் செய்வதற்கான கட்டணப்பட்டியலுடன் சுவரொட்டியை ஒட்டியுள்ளது.
மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் உள்ளார். இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதுகுறித்து காவல்துறையினரின் விசாரணையில் இந்த சுவரொட்டியை சமூக வலைதளத்தில் பதிவேற்றியவர், சர்தவால் காவல்
No comments:
Post a Comment