தொண்டி, நவ. 11- தொண்டி அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
மூழ்கிய படகை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இராமநாத புரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியை சேர்ந்த பிரமுடாஸ் (45) என்பவரின் படகில், நேற்று அதிகாலை மீன் பிடிக்க பிரமுடாஸ், லிங்கம், ரவி உட்பட 4 பேர் சென்றனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்து சத்தமிட்டனர். அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். படகு முற்றிலுமாக கடலில் மூழ்கியது.
No comments:
Post a Comment