அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 11- சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தா லட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:


தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன் னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிரா விடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.


அந்த வகையில் 2021ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநா ளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங் களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 16ஆம் தேதிக் குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment