பெங்களூரு, நவ. 11- 2016ஆம் ஆண்டு மோடி அரசு அமல்படுத்திய மாபெரும் பொருளாதார பேரழிவு நடவடிக்கை யான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிறக்கும் 1000 குழந்தைகளில், ஓராண் டிற்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின் றன என்ற எண்ணிக்கையை அடிப்படை யாக வைத்தே குழந்தை இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.
கடந்துபோன சில பத்தாண்டுகளை ஒப்பிடுகையில், கடந்த 2005_2016 வரையிலான காலக்கட்டத்தில், குழந்தை இறப்பு விகிதத்தில் 4.8% அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதற்கு முந் தைய காலக்கட்டங்களில், அந்த சரிவு விகிதம் 3% என்பதற்குள்தான் இருந்தது. இந்தியாவில் ஆயிரம் குழந்தைகள் பிறப் புக்கு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக ளில் 34 பேர் உயிரிழக்கின்றனர்.
பண மதிப்பிழப்பிற்குப் பிறகு தூய நீர் கிடைக்காமை, ஊட்டச்சத்து குறை பாடு, தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி கள் கிடைக்காமை மற்றும் அடிப்படை மருத்துவ, மின்சார வசதிகள் போன்றவை கிடைக்காமல் இந்த இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது,
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நலம் பேனும் சேவை அமைப்புகளுக்கு நிதியாதாரம் செய்யாமல் முடக்கியது, இதனால் குழந்தைகள் நலம் பெரிதும் பாதிக்கப் பட்டது, முக்கியமாக சேவை அமைப்புகளின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை நம்பி இருக்கும் குழந்தைகள் இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் உள்ளனர். பெற்றோர் களுக்கே இருவேளை உணவு சரியாக கிடைக்காத பட்சத்தில் குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவு கிடைக்காமல் 5 வயதிற்குள் இறந்து விடுகின்றனர்.
மற்றும் நாட்டின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிக்கு தூய குடிநீர் வழங்கும் சேவை அமைப்புகளை செயல் படவிடாமல் தனியார் வணிக நிறுவனங் களுக்கு ஆதரவாக இருந்த அரசின் செயல்பாடுகள் காரணமாக தூய குடிநீர் கிடைக்கமால் குழந்தைகளுக்கு நோயெ திர்ப்பு ஆற்றல் குறைந்து மரணிக்க நேரி டுகிறது, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தை எந்த அளவும் பாதித்ததோ அதே அளவு நாட்டின் சமூ கத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது என்ற உண்மை குழந்தைகள் மரணத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment