பாட்னா,நவ.11 ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள் வேண்டு மென்றே தாமதப்படுத்தினர். எங்கள் வேட்பாளர் கள் வெற்றி பெற்றும் கூட சான்றிதழ் வழங்காமல் தாமதித்தனர்.
முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வர் சுசில் குமார் மோடியும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி வித்தியாசம் குறை வாக இருந்த தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதப்படுத்தினர். முதலில் 119 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வென்றதாகதேர்தல்ஆணை யம் அறிவித்தது. அதற்கான பட்டியலையும்அதன் இணை யதளத்தில் வெளியிட்டது. தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவித் தனர். ஆனால், அவர் களுக்கு சான்றிதழ் வழங் கப்படவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஊழல்கள் ஜனநாயகத்தில் என்றும் வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment