செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

செய்தியும், சிந்தனையும்....!

சீறுகிறது சிங்களம்!


இலங்கைக் கடற்படையால் நாகை,காரைக்காலைச் சேர்ந்த 16  மீனவர்கள் சிறைப்பிடிப்பு.


ஏற்கெனவே தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை அரசு முடிவு - இதுகுறித்து தமிழக அரசோ, மத்திய அரசோ மூச்சுவிடவில்லை.


நம்புங்கள், மத்திய அரசின் அயலுறவுக் கொள்கை வெற்றியோ வெற்றி!


தேவை யோசனையே!


பா.ஜ.க. சதி செய்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது: - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு.


அதெல்லாம் சரிதான் - முதலில் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல்  இருக்க என்ன செய்யலாம் என்று சமாஜ்வாடி கட்சி யோசித்து நடக்கட்டும்!


தூங்குகிறது


மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்றவேண்டும்: - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்


நம் நாட்டில் எதில்தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே  இல்லை. சென்னை பெருநகரின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் இந்தப் பாலம் தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது என்பதற்காக அன்றைய அ.தி.மு.க. ஆட்சி  முட்டுக்கட்டை போட்டது - நீதிமன்றம் வரை பச்சைக் கொடி காட்டியது. இந்நேரம் செயல்பாட்டுக்கு வந்திருக்கவேண்டிய இத்திட்டம், படுத்துத் தூங்குகிறது.


பக்தி அரசியல் உண்மை!


அனுமதியின்றி வேல் யாத்திரையா? பா.ஜ.க.வுக்கு, தமிழக அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.


'அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுவது மாதிரி அழு!' என்ற ஏற்பாட்டோடு நடைபெறுகிறது இந்தப் பக்தி அரசியல் விளையாட்டு என்பதுதான் உண்மை!


No comments:

Post a Comment