காங்கயம் பகுதியில் ஆக்ரமிப்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் கோவில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

காங்கயம் பகுதியில் ஆக்ரமிப்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் கோவில்!


காங்கயம், நவ. 7- காங்கயம் வட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப் பாக திடீர் கோவில் கட்டப்பட்டுள்ளது.


தொடர்ந்து அரங்கிகேறி வரும் மதச் சார்பின்மை அவமதிப்பு


திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட் டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ள கோவில், முத்தூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அலுவ லங்கள் உள்ளிட்ட அரசுக்குச் சொந்த மான இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள "மதச்சார்பின்மை"  கோ ட்பாட்டையும், மதச்சார்பினமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசு ஆணைகள் ஆகியவற்றை அவமதிக்கும் விதமாக மதவழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதையொட்டி மதச் சார்பின்மையாளர்கள் பலமுறை புகார் அளித்தும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கை தாமதமாகியே வருகிறது.


நெடுஞ்சாலை அலுவலகத்திற்கு எதிரி லேயே இரவோடு இரவாக "திடீர் கோவில்"


இந்நிலையில் காங்கயத்தில் பயணிக் கும் கோவை-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்கு எதிரிலேயே தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடந்த ஞாயிற் றுக்கிழமை இரவோடு,இரவாக திடீர் வினாயகர் கோவில் கட்டப் பட்டுள்ளது.


இப்பிரச்சனை தொடர்பாக "விடு தலை" நாளிதழ் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது  இந்த ஆக்கிரமிப்பு குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


மதச்சார்பின்மையாளர்கள் ஆலோசனை கூட்டம்


காங்கயம் வட்டப்பகுதிகளில் மதப் பிரச்சினைகளை ஏற்படுத்த பொதுமக் கள் என்ற பெயரில் இந்துத்துவ வாதிகள் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி வருவதால் இதை முறியடித்து "மதச்சார்பின்மை" கோட்பாட்டை காக்கும் வண்ணம் காங் கயத்தில் மதச்சார்பற்ற அமைப்பினர் ஒன்றுகூடி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளது.


No comments:

Post a Comment