கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
சென்னை,நவ.6, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சு.குமாரதேவன் கேட்ட கேள் விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இந்தியில் பதிலளித் துள்ளது. "ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங் கிலம் தொடர்பு மொழியாக இருக்கும்" என்று நாட்டின் முதல் பிரதமர் நேரு உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து 1967இல் ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தி திணிக்க முடியாத வகையில் ஆட்சி மொழி சட்டத்தில் திருத் தங்கள் செய்யப்பட்டன.
இந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை பாஜக அரசு திணித்து வருகிறது. அதனால் தான் ஹிந்தி பேசாத மாநி லத்தைச் சேர்ந்த வழக்குரை ஞருக்கு ஹிந்தியில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பிரதமர் மோடி பாரதியாரின் கவிதைகள், திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். மறுபக்கம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் ஹிந்தி திணிக்கப்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment