அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஜோ பைடன் அணியைச் சேர்ந்த திருநங்கை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஜோ பைடன் அணியைச் சேர்ந்த திருநங்கை வெற்றி


வாசிங்டன், நவ.6 அமெரிக்கா தேர்தலில் நான்கு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா, விஸ் கோன்சிஸ், ஜார்ஜியா, மிச்சிகன் மாகாணங்களில் வாக்கு எண் ணிக்கை நிறுத்தமென தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் டெலாவேரில் வெற்றி பெற்று உள்ளார். இவர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர் ஆகும்.  31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் வழக்குரைஞர் ஆவார். இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம். வாக் களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு!


அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது; உச்சநீதிமன் றத்தை அணுகி வாக்கு எண்ணிக் கையை நிறுத்த உள்ளதாக டொ னால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.


மிசவுரி மாகாணத்தில் அமைக் கபட்ட டிரைவ் த்ரூ வாக்குச்சாவடி அமெரிக்க அதிபர் தேர்தலில் கரோனா நோயாளிகள் வாக்களிக்க ட்ரைவ் த்ரூ வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மிசவு ரியில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் சாலையோரமாக அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காரில் வந்த கரோனா நோயாளிகள் வாக்களித்தனர். பாதுகாப்புக் கவச உடையுடன் வந்திருந்த பணியா ளர்கள் காரில் வருவோருக்கு வாக் குச்சீட்டுகளை வழங்கி வாக்களிக்க உதவினர்.


தேர்தல் தினத்தன்று அமெரிக் காவில் பலருக்கு வந்த கமுக்கமான தொலைபேசி அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இந்த கமுக்கமான அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தானியங்கி அழைப்பில் ஒலித்த குரல்” வீட் டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று நம் ஊர் கரோனா வைரஸ் ரிங்டோன் போல கூறிய பின் அழைப்பு துண்டிக்கப்பட் டுள்ளது. தேர்தல் நாளில் வன் முறைகள் நிகழலாம் என்ற அச் சுறுத்தல் இருக்கும் நிலையில் பலருக்கு வந்த இந்த கமுக்கமான தொலைபேசி அழைப்பால் பர பரப்பு ஏற்பட்டது. இந்த அழைப்பில் கிருமிப்பரவல் பற்றியோ, அதிபர் தேர்தல் பற்றியோ குறிப்பாக எது வும் சொல்லப்படவில்லை என்ற போதும் தேர்தல் நாளில் வந்ததால், இது குறித்து அமெரிக்க மத்திய புலனய்வுத்துறைவிசாரணை நடத்தி வருகிறது.


No comments:

Post a Comment