தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று தடுப்பு கருவிகள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று தடுப்பு கருவிகள் வழங்கல்

சென்னை, நவ. 9- பிளம்பர் சமூகத்தின் பாதுகாப்பு நல்வாழ்வை உறுதி செய்வதற்காக வீ.ஆர் வாட்டர்ஃபெடரேஷன் இந்தியா அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பிளம்பர் தொழிலாளர்களுக்கு 3500 பாதுகாப்பு மற்றும் பிளம்பிங் கருவி கிட்களை வழங்கும் முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.


இம்முயற்சியின் தொடக்கமாக, வேர்ல்ட் விஷனுடன் இணைந்து ரோகா பேரிவேர் சென்னை தலைமை அலுவலகத்தில், 15 பிளம்பர் களுக்கு அத்தியாவசிய கருவிகளை வழங்கியது. பெடரேஷன் நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் மற்றும் வேர்ல்ட் விஷன் இந்தியா வின் வளத்திரட்டல் மற்றும் பொது ஈடுபாட்டுப் பிரிவின் இயக்குநர் சோனி தாமஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.


இந்த கருவிகள் பிளம்பர்களை பாதுகாப்பாக இருக்கவும், தடையற்ற சேவையை வழங்கிடும் வகையில் நவீன கருவிகளைக் கொண்டு தங்கள் பணிகளைச் செய்யவும் உதவும். சென்னை தவிர, டில்லி, மும்பை, பெங்களூரு, திருச்சி, கொல்கத்தா, ஃபரிதாபாத், கொச்சின் மற்றும் விசாக் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் இம்முன் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment