குடந்தை, நவ. 6- குடந்தை பெரியார் மாளிகையில் பெரியார் பெருந்தொண்டர் ஆ.பிழைபொறுத்தான் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 31.10.2020 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மேனாள் வெளிமாநில தொடர்பு செய லாளர் தி.இராஜப்பா தலை மையேற்று படத்தினை திறந்து வைத்தார். கழக பேச் சாளார் தஞ்சை இரா.பெரி யார் செல்வன் நினைவேந்தல் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்ட. செயலாளர் சு.துரைராசு, மாவட்ட துணைத் தலைவர் வலங்கை.வே.கோவிந்தன், குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.தமிழ்மணி, குடந்தை நகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட மகளிர ணிச் செயலாளர் திரிபுரசுந் தரி, திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய செயலாளர் அ.சங் கர், திருவிடைமருதூர் ஒன் றிய து.செயலாளர் நாச்சியார் கோயில் குணசேகரன், பேராசிரியர் அரங்க.சுப் பையா, தமிழ் தேசிய பேரியக்க தஞ்சை மாவட்ட செயலாளர் ந.வைகறை, தமிழர் தேசிய முன் னணி திருவாரூர் மாவட்ட தலைவர் ச.கலைச்செல்வம், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பி னர் க.விடுதலைச்சுடர், சோலை .மாரியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழ. அன்புமணி, திருநாகேஸ்வரம் அரிமா சங்க தலைவர் கி. முருகன், பிழைபொறுத்தான் பேத்திகள் அமிழ்து, தமிழினி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
கழக தோழர்கள், தோழமை கட்சியினர், உறவினர்கள், நண் பர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக் கும் குடும்பத்தினர் சார்பாக தோழியர் பி.சிவகாமசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும், சமூக இடை வெளியையும் பின்பற்றினர்.
No comments:
Post a Comment