பெரியார் கேட்கும் கேள்வி! (155) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (155)


அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த அய்ப்பசி மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய் பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிரப்புவது சாரீர சுகத்திற்கு ஏற்றதா? என்று தீபாவளியை நம்பும் எந்த முட்டாளா வது யோசித்துப் பார்க்கிறானா? சாதாரணமாக நமது நாட்டில் "காலரா" என்னும் விஷப் பேதி நோய் பரவுவது இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த விஷப் பேதி உண்டாகிறது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப் பண்டிகையினால் நமது ஜன சமூகத் திற்கு உண்டாகும் தீமையை மறுக்க மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷப் பேதிக்கு முதற் காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரணமாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள ஜீரணக் கருவிகள் என்ன நிலையடையும்? இதனால் பலவிடங் களில் நமது நாட்டில் விஷப் பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான நோய்களும் உண்டாகி விடு கின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கையில்லையானால் தீபா வளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரி களுக்குச் சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள் ளலாம், இத்தகைய அவதிகளை ஏற்படுத்திக் கொள்வதால் மனித சமூகத்திற்கு உண்டாகும் நன்மைதான் என்ன?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம், 23.10.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment