டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜன நாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பைவிட கூடுதல் வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார். தேர்தலை எதிர்த்து நீதிமன்றம் செல்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- பீகார் மாநில மூன்றாவது இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரை யில், இதுவே தனது கடைசி தேர்தல் என நிதிஷ்குமார் கூறினார்.
- தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நியாய் திட்டம், விவசாயிகளிடையே நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- தமிழக பாஜக சார்பில் நடத்தப்போவதாக அறிவித்த வேல் யாத்திரைக்கு தமிழ் நாடு அரசு அனுமதி மறுத்துவிட்டது.
- பீகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் திறன் கடந்த ஆறு ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஆசார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- உ.பி. ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் மரணம் குறித்து விசாரணையை எப்போது முடிப்பீர்கள்? என லக்னோ நீதிமன்றம், சிபிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
டெக்கான் ஹெரால்டு:
- மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களை அடுத்து, தற்போது ஜார்கண்ட் மாநில அரசும், சி.பி.அய்.-க்கு அளித்துள்ள பொது அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளது.
தி டெலிகிராப்:
- பாஜக சார்பில் பாகிஸ்தான், சட்டப்பிரிவு 370 பற்றி பீகார் தேர்தல் பரப்புரையில் பேசி வந்த சூழலில், ஆர்.ஜே.டி. கூட்டணி யின் முதல்வர் வேட்பாளர், அம்மாநில மக்களின் வேலை வாய்ப்பு, விவசாயக் கடன் ரத்து, மின் கட்டணச் சலுகை, பெண் களுக்கு இலவசக் கல்வி, அனைத்து மக்களுக்கும் நீதி என்று பேசி வருவது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்தல் பரப்புரையில், இதுவே தனது கடைசித் தேர்தல் என்பது, அவரது அரசின் செயல்பாட்டின்மைக்கு கருணை மனு போடுவதற்கு ஒப்பாகும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லாது என அலகா பாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருவர் எந்த மதமும் மாறுவதைத் தடுப்பது, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மனுவில் கூறப்பட்டுள்ளது..
குடந்தை கருணா
6.11.2020
No comments:
Post a Comment