செந்துறை, நவ. 6-- செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சி கருப்புசாமி விஜயா ஆகியோரது மகன் கவிமணி சின்ன வெண்மணி சங்கர் பூங்கொடி ஆகியோரது மகள் சசிகலா ஆகியோரது இணையேற்பு விழா புது வேட்டக்குடி ஜேஜே திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களது தலைமையில் 30.10.2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை நீலமேகம் வரவேற்புரை ஆற்ற மண்டல தலைவர் இரா கோவிந்தராஜன் மண்டல செயலாளர் மணி வண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சி காமராஜ் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் மணவிழாவை நடத்தி வைத்தார். செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ், நமங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன் மாவட்ட ப.க தலைவர் தங்க சிவமூர்த்தி மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந்தில்குமார் பொதுக்குழு உறுப்பினர் பஆறுமுகம் புழல் சா.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச் சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து, தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் மு. மருதமுத்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், நந்தி யன் குடிக்காடு இளவழகன், ரகுபதி, பெரியாக் குறிச்சி ராச செல்வகுமார் உள்ளிட்ட கழக பொறுப்பாளர் களும் உறவினர்களும் நண்பர்களும் சிறப்பாக பங் கேற்றனர். பொதுச் செயலாளர் சுயமரியாதைத் திரு மணத்தின் சிறப்புகளை விளக்கியும் தோழர் கருப்பு சாமியின் இயக்கப் பணிகள் குறித்தும் விளக்கி வாழ் வியல் உரையாற்றினார். பங்கேற்ற சிறப்பு விருந்தினர் களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட் டது. மண மகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment