மூக்கு உடைபட்டும், உடைபட்டும் புத்தி வரவில்லையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

மூக்கு உடைபட்டும், உடைபட்டும் புத்தி வரவில்லையா

மூக்கு உடைபட்டும், உடைபட்டும் புத்தி வரவில்லையா?



குதர்க்கப் புத்தி யாருக்குத் தினமலர் திரிநூலே? தமிழ் மொழி  செம்மொழி யாக்கப்பட்டதால் காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் - ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும் - ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். ('தினமலர்' வாரமலர் 13.6.2004).


தினமலரே இது என்ன புத்தி? குதர்க்கப் புத்தியா - இல்லை உங்களின் குலதர்மப் புத்தியா?


'வேல் யாத்திரை விவகாரம் பற்றி 'வேல்' எதிர்ப்பாளர்களுக்கு என்ன வேலை?' என்று ஏதோ திராவிடர் கழகத் தலைவரை மடக்கி விட்டதாக மந்தப் புத்தி!


திருப்பி நாமும் கேட்கலாமே! பெரி யாரைப் பிடிக்காதவர்கள் பெரியாரைப் பற்றி ஏன் பேச வேண்டும்? தளபதி ஸ்டாலினைப் பிடிக்காதவர்கள் அவரைப் பற்றி ஏன் பேச வேண்டும்? செம் மொழியைப் பிடிக்காதவர்கள்  செம் மொழித் தமிழில்  பத்திரிகை ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டே போகலாமே! அட "தினமண்டுகளே" ஏன் மூக்கை நுழைத்து  மீண்டும் மீண்டும் உடைபடுகிறீர்கள்?


No comments:

Post a Comment