கரோனா தடுப்பூசி மருந்து: ஆஸ்திரேலியாவில் உற்பத்தி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

கரோனா தடுப்பூசி மருந்து: ஆஸ்திரேலியாவில் உற்பத்தி தொடக்கம்

கான்பெரா. நவ. 9- கரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உரு வாக்கி சோதனை செய்து வருகிறது.


இங்கிலாந்து அரசு மற்றும் மருந்து நிறுவன மான  அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப் பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப் பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந் தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித் திருந்தது.


இந்நிலையில், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மருந்து உற்பத் தியை ஆஸ்திரேலியா தொடங்கியது. இந்த தடுப்பூசிகள் உலகளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாக கருதப்படுகி றது. ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகி றது.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய பரிசோ தனை கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளது என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.


இந்தியாவில் தற்போது 3 கரோனா தடுப்பூசிகள் முன்னணி சோதனைக ளில்  உள்ளன, அவை மருத் துவப் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர் டின் கரோனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப் பட்ட மற்ற 2 தடுப்பூசி களை விட முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment