பல்லாவரத்தில் புத்தர் சிலை உடைப்பு - எதேச்சையானதல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

பல்லாவரத்தில் புத்தர் சிலை உடைப்பு - எதேச்சையானதல்ல!

- கவிஞர் கலி.பூங்குன்றன்



தமிழ்நாட்டில் தலைவர்களின் சிலைகளை உடைப்பது -  சேதப்படுத்துவது- காவிச் சாயம் பூசுவது - செருப்பு மாலை போடுவது - என்ற வியாதி அதிகமாகப் பரவி வருகிறது.


இவற்றைப் பெரும்பாலும் செய்பவர்கள் காவிக்கட்சி யினர் என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது.


பெரியார், அம்பேத்கர், சிலைகளைச் சிதைப்பது முதன்மை யாக இருந்தது. இப்பொழுது சென்னையையடுத்த ஜமீன் பல்லாவரத்தில் இருந்த புத்தர் சிலையும் உடைக்கப் பட்டுள்ளது.


சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் உள்ள பல்லாவரம் பெரிய மலை மேற்பகுதியில், அருள் நிலை புத்தர் ஆலயம் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தக் கோயில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இம்மலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, இரண்டரை அடி உயர த்தில், கல்லால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத நபர்கள், புத்தர் சிலையின் தலை மற்றும் கையை உடைத்து சேதப்படுத்தினர். மறுநாள் காலையில், நிர்வாகி கள் சென்ற போது, சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந் தது. இச் சம்பவம் குறித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின், உடைக்கப்பட்ட பகுதிகள் ஒட்டப்பட்டன. மலையில் உள்ள புத்தர் சிலையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம், பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



புத்தர் சிலை உடைப்பு என்பதைத் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை சேதங்களோடு தொடர்புபடுத் திப் பார்க்க வேண்டும்.


சித்தாந்த ரீதியாக இம்மூவரும் ஆரிய வருணாசிரம சனாதனக் கோட்பாடுகளைத் தகர்ப்பதில் ஒரே நோக் கோட்டில் வரக் கூடியவர்கள்.


அதனால்தான் வால்மீகி இராமாயணத்தில் (அயோத் தியா காண்டம் - சுலோகம் 1502) கூறப்பட்டு இருப்பதைக் கவனிக்க வேண்டும்.


“ஒரு திருடன் எப்படிப்பட்டவனோ அப்படிப்பட்டவன் புத்தன். வேதத்திற்கு எதிரானது புத்தனுடைய கருத்துகள். புத்தியுள்ள மக்களே,


“நாத்திகர்களாகிய பவுத்தர்களுக்கு முகம் கொடாதே!”


யதாஹி சவா


ஸ்யத தயாஹி புத்த


ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி”


(வால்மீகி இராமயணம் - அயோத்தியா


காண்டம்  - சுலோகம் 1502)


இந்தியத் துணைக் கண்டத்தில் பவுத்தம் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது. புத்தர் கோயில்கள் இடித்துத் தரை மட்ட மாக்கப்பட்டன.


பவுத்தக் கோயில்கள் ஹிந்துக் கோயில்களாக உரு மாற்றம் செய்யப்பட்டன. “பூரிஜெகந்நாதர் ஆலயம் பழங் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தது” என்று சொன்னவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர் பதை பதைத்துப் போவர் - உண்மை விரும்பிகள் மூக்கின் மேல் விரலை வைப்பர் - சங்பரிவார்களோ சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குவார்கள்.


நூற்று அய்ம்பதாம் ஆண்டு என்று கூறி ரத யாத்திரை நடத்திக் கொண்டு திரிகிறார்களே - அமெரிக்கா வரை சென்று பிராமண மதத்தைப் (அம்மாநாட்டில் இவர் பிரதிநிதித்துவப்படுத்தியது) - பிராமணீசம் என்பதைத்தான் - ஹிந்து என்ற பெயரே அப்போது கிடையாது) பரப்பினாரே ‘வீரத்துறவி’ என்று வீராவேசமாகப் பேசப்படுகிறாரே சாட் சாத் அந்த விவே கானந்தர்தான் பூரி ஜெகந்நாதர் கோயில் பழங்கால புத்தர் கோயில் என்று பிரகடனப்படுத்தியவர். ஆதாரம் இல்லாமலா? நூல்: "இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக”


பூரி ஜெகந்நாதர் கோயில் இப்படி என்றால் திருப்பதி ஏழுமலையான் கோயிலே புத்தரின் நின்ற கோலம்தான் என்று ஒரு நூலே வெளி வந்துள்ளது என்ற செய்தி பலருக்குக் ஆச்சரியமாக இருக்கலாம் - ஏன் ஆத்திரம் அடைபவர்களும் உண்டு.


“Tirupati Balaji was a Buddhist Shrine” என்ற நூலை எழுதியவர் டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S.


“Lord Venkatesvara, the presiding deity on the famous Tirumalai Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkatesvara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribel Buddhist and was,Vaishnavized by saints and latter sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of pandharpur, Jagannatha of Puri, Ayappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”


இப்பொழுது பல்லாவரத்தில் புத்தர் சிலை உடைக் கப்பட்டுள்ளதே - அவ்வூரைச் சுற்றி ஏராள புத்தர் சிலைகள் இருந்திருக்கின்றன.


பல்லவ அரசர் குடும்பத்தில் ஒரு பிரிவினர் பவுத்தர்களாக இருந்திருக்கின்றனர். இந்த ஊருக்கு அருகில் உள்ள கணிக் கிலுப்பை என்ற ஊரில் புத்தர் சிலைகள் இருந்திருக்கின்றன. இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயில், முன்பு புத்தர் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார்.


பல்லவபுரத்தையடுத்த செங்கற்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பூந்தமல்லி அருகே மாங்காடு  பகுதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஒரு கல் வெட்டு உள்ளது. சுந்தரபாண்டிய தேவர் (1251-64) என்ற அரசன் காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு சாசனத்தில் இங்கிருந்த புத்த கோயிலுக்கு மாங்காடு கிராமம் மானியமாகக் கொடுக் கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. மாங்காடுக்கு அருகில் உள்ள பட்டு என்ற கிராமத்தினுள் புத்தர் கோயில் அகற்றப் பட்டு பிள்ளையார் கோயிலாக மாற்றப்பட்டதாகக் கூறப் படுகிறது.


காஞ்சிபுரத்தில் இருந்த கச்சிக்கு நாயகர் கோயில் என்ற புத்த கோயிலுக்கு பொன்னேரிக்கு அருகேயிருக்கும் நாவ லூர் மானியமாக எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்து மதப் புனிதத் தலமாகக் கருதப்படும் ஊர் காஞ்சி என்று அழைக்கப்படுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அர சாண்ட அசோக சக்ரவர்த்தி கட்டிய ஒரு பவுத்த ஸ்தூபி காஞ்சியில் இருந்ததாக கி.பி. 7ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து சென்ற புகழ் பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் எழுதி யிருக்கிறார்.


இப்படிப்பட்ட பழைய செங்கப்பட்டு, காஞ்சிபுரம், இன்றைய சென்னை மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் புத்தர் சிலைகளும், தர்மச் சக்கரங்களின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன”


- இவற்றிற்கு எல்லாம் ஆதாரம் எங்கே என்று அதட்டிக் கேட்பவர்கள் இருக்கக் கூடும் ஆதாரம் இன்றி என்றைக்கு ‘விடுதலை’ எழுதியது?


சாட்சாத் ‘இந்து’ ஏடுதான் விலாவாரியாக வரிந்து தள்ளியிருக்கிறது (‘தமிழ் இந்து’ 21.8.2014).


இதற்கு மேலும் தமிழ்நாட்டில் எந்தெந்த பவுத்தக் கோயில்கள் எல்லாம் வைதீகக் கோயில்களாக உருமாற்றப் பட்டன என்பதை ஒரு நீண்ட பட்டியலாகவே ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் “பவுத்தமும் தமிழும்“ எனும் நூலில் வாரி வழங்கியுள்ளார்.


எந்த அளவுக்கு இந்துமதம் தன் மோசடிக்கைகளை நீட்டியிருக்கிறது என்று நினைத்தால் நிலைகுலைய வைக்கிறது.


பார்ப்பன வைதிக சனாதன மதமான (இந்து என்பது பின்னால் வந்தது - வெள்ளைக்காரன் சூட்டியது என்று சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் - ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 267) இந்து மதம் மோசடிக்கு ஒரு உச்சம் - இமயமலை எவரெஸ்டையும் தாண்டக் கூடியது.


வைணவம் - புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று ஆக்கிக் கொண்டது; மற்றொரு பிரிவாகிய சைவமோ புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக விழுங்கிக் கொண்டது. சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர். அதனை இந்து மதம் வரித்துக் கொண்டு சாஸ்தா அல்லது அய்யனாராக்கி விட்டது. புத்தருக்கு விநாயகன் என்றும், தருமராசன் என்ற பெயர்கள் உண்டு. இந்தத் தருமராசனை இந்தத் தர்ப்பைப் புற்கள் என்ன செய்தன?


தருமராசர் என்ற பெயரில் இருந்த பவுத்தக் கோயில் களை பிற்காலத்தில் மகாபாரதத்தில் கூறப்படும் பஞ்ச பாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். விநாயகர் என்றிருந்த புத்தர் கோயில் களையும் விநாயகர் கோயிலாகவும் உருமாற்றினர்.


பழைய சைவ சமயத்தில் விநாயகர் வணக்கம் கிடை யாது என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டது என்றும் தமிழ்க் கடலும் - சைவ ஆய்வறிஞருமான மறை மலை அடிகள் கூறுகின்றார்.


இந்து மதத்தில் கிருஷ்ணன் அவதாரம் என்பதே புத்தர் கொள்கையை ஒழிக்கவே என்று கூறுகிறது என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா - தொகுதி 4 - பக்கம் 210).


இதோ:


“புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்சசீலம்) முக்கிய மாக பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே “கிருஷ்ண லீலா” கதையின் நோக்கம். புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவ தாரக் கதை இட்டுக்கட்டப்பட்டது” என்கிறது என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா.


“விலங்குகளைப் பலியிடும் யாகங்களை நடத்தி தட்ச ணையாக பொருள் ஈட்டுவதே வேத மதம்; அதை எதிர்த் தெழுந்த பவுத்தம் அசோகரால் அரச மதமாக்கப்பட்டதால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. அரசு ரீதியான ஆதரவுகளை இழந்த பார்ப்பனர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும், வருமானத்தையும் இழந்தனர். உயிர்ப்பலியிலும், சோம யாகத்திலும் நம்பிக்கையுள்ள சாம வேத பார்ப்பனராகிய புஷ்யமித்திர சுங்கன் (படைத் தளபதி) அசோகர் வழி வந்த பிருகரத்ரதனைக் கொலை செய்து, கி.மு. 185இல் ஆட்சியைச் சூழ்ச்சியாகக் கைப்பற்றினான். ஒவ்வொரு பவுத்த பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலை வைத்துக் கொல்லும் அளவுக்கு அந்தப் பார்ப்பனனின் வெறியும், வெறுப்பும் வீறு கொண்டு இருந்தன. பார்ப்பனீ யத்தின் வெற்றியாக அண்ணல் அம்பேத்கரால் சுட்டப் படும் இவனது ஆட்சிக் காலத்தில் பார்கவா என்பவரால் கி.மு. 170 கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மனுஸ்மிருதி.”


வேண்டும் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஆதாரக்குவியல் மேடுகள் ஏராளம் உண்டு.


“வேதத்தை வெறுக்கிற புத்தர் இயற்றிய நூல்களைப் பின்பற்றி பிராமணர்களின் வருணாசிரமதர்மத்தை வெறுக் கின்றார்கள் பவுத்தர்கள். அந்தக் கலியர்களான பவுத்தர்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து விட்டனர். ஆகவே பிராமணர்களைக் காப்பாற்றும் பொருட்டும், நாத்திகர்களை ஒழிக்கவும் சங்கரர் தோன்றி வெற்றி கண்டார். இதைக் காட்டிலும் சங்கரர் என்னதான் செய்ய முடியும்?” என்று சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சமஸ் கிருதத்தில் எழுதிய வித்தியாரண்யா என்ற பார்ப்பனர் எழுதுகின்றார். எத்துணை எத்துணை சூழ்ச்சிப் படலங்கள் பவுத்தத்தை ஒழிக்கப் பார்ப்பனர்களால் அரங்கேற்றப் பட்டுள்ளன என்பது புரியவில்லையா?


ஏதோ ஜமீன் பல்லாவரத்தில் மலைமேற் பகுதியில்  புத்தர் சிலை கடந்த முதல் தேதி இரவில் உடைத்து நொறுக் கப்பட்டது என்பது எதேச்சையாக நடந்ததாக எண்ணிவிட முடியாது.


ஆரிய புஷ்யமித்திர சுங்கன் காலத்தின் தொடர்ச்சியின் ஒரு பாகம் இது என்பதே வரலாற்றுக் கல்வெட்டு.


காவல்துறை இதனை எப்படி எல்லாம் மறுக்கும் தெரியுமா? புத்தி சுவாதீனம் இல்லாதர்கள் அல்லது குடி போதையில் இருந்தவர்கள் இதனைச் செய்து விட்டனர் என்று எளிதாக வசதியாகக் கூறி விசாரணை நாடகக் கோப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவர். புஷ்யமித்திரன் பரம்பரை ஆதிக்க ஆட்சிதானே - இந்தியாவில் இப்போது?


No comments:

Post a Comment