“ஹிந்து ஒருவரால் காந்தி கொலை செய்யப்பட்டார்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

“ஹிந்து ஒருவரால் காந்தி கொலை செய்யப்பட்டார்”

‘தி நியூயார்க் டைம்ஸ்'-வெளியிட்ட காந்தி கொலை தொடர்பான செய்தி



காந்தியாரின் கொலை நடந்த மறுநாள் 31.1.1948 அன்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் 'த நியூயார்க் டைம்ஸ்' தெளிவாக தலைப்புச் செய்தியை எழுதி இருந்தது, அதில் காந்தி ஹிந்து ஒருவரால் கொல்லப்பட்டார் (Gandhi is killed by a Hindu) என்று குறிப்பிட்டிருந்தது, ஆனால் அப்போது இந்தியாவில் இசுமாயில் என்று கையில் பச்சை குத்தியிருந்த ஒருவரால் காந்தி கொல்லப்பட்டார் என்று பொய் செய்தி பரப்பப்பட்டது,


அந்தச் செய்தியின் தமிழாக்கத்தின் சுருக்கம்


இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்கவர்களுள் ஒருவ ரான காந்தியார் ஹிந்துத்துவ பழைமைவாத சிந்தனை கொண்ட ஒருவரால் கொல்லப்பட்டார்.  இவரை அமெரிக் காவின் சார்பாக டில்லியில் தூதராக இருக்கும் ஒருவர் அந்த இடத்தில் காந்தியை சந்திக்க நின்று கொண்டு இருந்த போது உடனடியாக துணிச்சலோடு பிடித்தார். அதன் பிறகு ஒரு இந்திய விமானப்படை அதிகாரி அவனை கீழே தள்ளி அவன் கையிலிருந்து துப்பாக்கியை பிடுங்கினார்.


 அவன் பெயர் நாதுராம் கோட்சே என்பதும் அவர் ஏற்கெனவே பல முறை காந்தியைக் கொலை செய்ய முயன்றவிவகாரமும் தெரியவந்தது, குண்டடிபட்டு கிழே விழுந்த காந்தியை அருகில் உள்ள அறைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் 12 நிமிடத்திற்குப் பிறகு இறந்துவிட்டார்.


 அவர் துப்பாக்கிகுண்டு  பட்டதில் இருந்து மரணிக்கும் வரை எந்த ஒரு வாக்குமூலத்தையும் அவர் கொடுக்க வில்லை.


 கொலை செய்த குற்றவாளியான நாதுராம் கோட்சே என்பவர் ஹிந்துத்துவ அமைப்பின் பின் புலத்தைச் சேர்ந்தவர், ஹிந்து மகாசபை அமைப்பில் இருந்தவர். ஏற்கெனவே காந்தி புனே சென்ற போது அவர் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றார், ஆனால் அந்த நிகழ்வில் காந்தி தப்பித்துவிட்டார். டில்லியில் இரண்டு முறை கொலை செய்ய முயன்றதாக அவரே விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். என்று காந்தி கொல்லப்பட்ட செய்தியை தலைப்புச் செய்தியாக்கி 'ஒரு ஹிந்துதான் அவரைக் கொன்றார்' என்று எழுதியது.


No comments:

Post a Comment