தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப் படும் கொழுப்பு வகைகளை டிரான்ஸ் ஃபெடி ஆயில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதை டிடான்ஸ் ஃபேட் என்று பொதுவாக அழைப்பார்கள். இவ்வகை கொழுப்பு உயிரபாயத்தை ஏற்படுத்தும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இவ்வகை கொழுப்புகளை ஆலையில் உற்பத்தி செய்யும் போது சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின் றன, இவ் வகை வேதிப் பொருட்கள் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களை விரைவில் உண்டாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக் கையில் “உலகின் அதிகம் மரணத்திற்கு ஆளாகும் மக் களில் பெரும்பாலானோர் மாறுபக்கக் கொழுப்பு எனப் படும் டிரான்ஸ் ஃபேட் உட்கொள்வதால் மரணிக்கின்றனர்" என்று கூறியுள்ளனர்.
தொழிற்சாலைகளில் உணவு தயாரிக்கும் முறை துவங்கிய பிறகு அவர்களின் அதிக அளவுத் தேவைகளை முழுமை பெறச்செய்ய 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் செயற்கைக் கொழுப்பை உருவாக்கினார்கள்.
தாவர எண்ணெயை மெதுவாக வெப்பமூட்டி அது கூழ்ம நிலைக்குச் செல்லும் போது அதனூடாக ஹைட் ரஜனை செலுத்துவதன் மூலம் இவ்வகை கொழுப்புகள் தயாரிக்கப் படுகின்றன. இதைக் கண்டறிந்ததற்காக பவுல் சபைடர் மற்றும் விக்டர் கிரிகனார்ட் ஆகிய இருவருக்கும் 1912-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது,
இதனை உணவிற்காகப் பயன்படுத்தத் துவங்கிய போது இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உடனடியாக அதிகரித்தது, கிட்டத்தட்ட பெரும் தொழிற் சாலைகள் தயாரிக்கும் பல உணவுப் பொருட் களில் இவ்வகைக் கொழுப்பு பயன்படுத்தப் படுகிறது.
திரவ நிலையில் உள்ள எண்ணெய், கொழுப்பாக மாறும் போது ஆபத்து நிறைந்த உணவுப் பொருளாக மாறுகிறது. அதே போல் தொழிற் சாலைகளில் நீண்ட நேரம் கொதிநிலையில் இருக்கும் தாவர எண்ணெய்யும் இத்தகைய கொழுப்புத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. பெரும்பலான உணவு விடுதிகள் தங்களின் செலவீனங்களைக் குறைக்க, முன்பு பயன்படுத்திய எண் ணெய்யையே மீண்டும் மீண்டும் சூடேற்றி பயன்படுத்து கின்றன. இவ்வகைக் கொழுப்புகள் இரத்தத்தை இலகு வாக்கப் பயன்படும் நல்ல கொழுப்புகளின் இடத்தை பிடித்துவிடுகிறது, இதனால் இரத்த ஓட்டத்தில் பல இடையூறுகள் ஏற்பட்டு இதயத் திற்கு இரத்த ஓட்டம் சீராக செல்வது தடை செய்யப்படுகிறது,
இதன் மூலம் தமணி வீக்கம், இரத்த நாளத்தில் பாதிப் புகள், விரைவில் உடல் உறுப்புகள் சோர்வு, நினைவாற்றல் இழத்தல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இவ்வகைக் கொழுப்புகளால் மரண அபாயம் 34 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இதய நோய்கள் 21 சத வீதம் அதிகரிக்கும், இரத்த நாளம் தொடர்பான நோய் கள் 28 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வகை கொழுப்புகள் இயற்கையாகவே இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட் களில் மிகவும் குறைந்த அளவு காணப்படுகின்றன, ஆனால் இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள் வதால் மிகவும் குறைவான அளவு பாதிப்பே ஏற்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் 100 கிராம் எண்ணெயில் இவ்வகை கொழுப்புகள் வெறும் 2 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த அளவு அதிகம் இருக்குமானால் அதைத் தடைசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment