கரோனா வகை வைரஸ் சார்ஸ் கோவிட் 2 வகையைச் சார்ந்தவை ஆகும். இவை மூளையில் நினைவுப் பகுதியில் உள்ள திசுக்களை பாதிக்கும். இதன் மூலம் நமது மூளையில் சேமிக்கப் பட்ட நிகழ்வுகள் குறித்த நினைவுகள், வலி உணர்வு மற்றும் மொழியறியும் திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று பிரேசில் மருத்துவ ஆய்வு கூறுகிறது.
இது தொடர்பான மருத்துவ ஆய்வு அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. அதில் நமது மூளையின் நினைவுகள் மற்றும் இதர சில முக்கிய தகவல் தளங் களைச் சேமித்து வைக்கும் பகுதி மற்றும் வலிகுறித்த தன்மைகளை நமக்கு அறி விக்கும் பகுதி களான ’அஸ்டிரோசைட்ஸ்’ எனப்படும் நட் சத்திர வடிவிலான மத்திய நரம்புமண்டலப் பகுதியின் இயக்கத்திற்கு தேவையான தனி மங்கள்(பொட்டாசியம்) போன்றவற்றை இப்பகுதிக்கு எடுத்துச் செல்வதை சார்ஸ் கோவிட் 2 வகை வைரஸ்கள் பாதித்துள்ளன என்று கம்பனீஸ் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரி யர் தேனியல் மார்ட்டி டிசூசா கண்டறிந்துள்ளர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மூளைச் செல்களின் காரணமாக 26 நபர்கள் இறந் துள்ளதாகவும் இவர்கள் அனைவருமே கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்ட வர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தவகை வைரஸ் பாதிப்பு குறித்து அறியும் ஆய்விற்கு “இம்மினோ-ஹிஸ்டோ - கெமிஸ்டரி” என்று பெயரிட்டு அழைக் கின்றனர். இது உடல் திசுக்களில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பகுதியை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுபிடிக்கப் படும் வழிமுறை ஆகும்.
கரோனா வைரஸ் காரணமாக இறந்து போன 26 நபர்களின் திசுக்கள் எங்களிடம் ஆய்விற்காக கொடுக்கப்பட்டன. இதனை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் 5 மாதிரிகளில் ஆய்வின் முதல் ஆய்விலேயே இறந்தவர்களின் மூளை யில் நினைவுக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் மற்ற மாதிரிகள் அனைத்துமே கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையும், அந்த மாதிரிகளில் ஆரம் பக்கட்ட சோதனைகள் முடிந்துள்ளது என்றும் கூறினார்.
இந்த ஆய்வின் மூலம் மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்பு களான தலைவலி, மயக்கம் வருதல் மற் றும் சுயநினைவற்று இருத்தல் போன்றவை இருக்கும் நோயாளிகளைக் கரோனா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கான கரோனா பதிப்பு கடுமையானதாக இருக் கும். இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இது தொடர்பான ஆய்வை பிரேசி லின் வர்த்தகத் தலைநகரமான சாபோ லோவில் உள்ள யுனிகாப் பல்கலைக் கழகம் உயிரியல் பேராசிரியர்கள், பிரே சில் தேசிய உயிராய்வியல் மய்யம், மற் றும் ரியோ டி ஜெனிரோ பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு நிறுவனம் இணைந்து நடத் தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment