பெண்குழந்தைகள் புத்திசாலியாக இருப்பதற்குக் காரணம் புதுமையான விளையாட்டுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

பெண்குழந்தைகள் புத்திசாலியாக இருப்பதற்குக் காரணம் புதுமையான விளையாட்டுகள்

பெண் குழந்தைகளுக்கு அதிக நன்மையைத் தருகிறது



பெண்குழந்தைகள் எந்த ஒரு விளையாட் டிலும் ஆர்வத்துடன் பங்கேற்று அவர்களின் மனவளர்ச்சி மற்றும் புரிந்து கொள்ளும் திறனை அதிகரித்துக் கொள்கின்றனர் என்று அண்மைக் கால அறிவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.


முக்கியமான புதிய வகை விளையாட்டு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடும் 6 வயது முதல் 10 வயது  உள்ள பெண் குழந்தைகள் 12 வயதிற்குள் கவனக்குறைவு மற்றும் சுறுசுறுப்புத் தன்மை குறைபாடு எனப்படும் (ஏ.டி.எச்.டி) என்ற நோயிலிருந்து வேகமாக மீண்டு விடுகின்றனர். இவர்களை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும் போது இவர் களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.  இது தொடர்பாகக்  கனடாவில் உள்ள  மாண்ட்ரியல் பல்கலைக்கழக ஆய்வியலாளர் லிண்டா பகினி அண்மையில்  வெளிவந்த  'பிரிவெண் சட் எடிசன்' என்ற இதழில் எழுதிய தன் ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளதாவது, “ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும் போது பெண் குழந்தைகள் அனைத்து ச் செயல்பாடுக ளிலும் மிகவும் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர்.  முக்கியமாக  அவர்கள்  புதிய  வகை விளையாட்டு அல்லது செயல்பாடுகளில் ஆர்வமுடன்  பங்கேற்கின்றனர்.


 முக்கியமாக ஏ.டி.எச்.டி குறைபாடு  குழந் தைகளின் வளரும் பருவங்களில் அவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் காரணி யாக உள்ளது. இது பள்ளிக்காலங்களில் அவர்களுக்கு வகுப்பு நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும் தன்மையைக் குறைக்கிறது.


இக்குறைபாட்டை நீக்க வகுப்பறையின் வெளியிலே நடக்கும் விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன, வகுப்பறைக்கு வெளியே தனது தோழிகள் உடனான உரையாடல் அவர்களுக்குள்ளேயே புதிய புதிய சிந்தனைகளைப்  பரிமாறிக் கொள் ளுதல் போன்றவை அவர்களின் எதிர் காலத்திலும் பெரிதும் உதவுகின்றன.


கனடாவில் உள்ள கியூபெக் கல்வி நிறுவ னத்தின் புள்ளியியல் துறை 1997 ஆம் ஆண்டு மற்றும் 1998ஆம் ஆண்டு பிறந்த குழந்தை களின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். தங்கள் ஆய்வின் முடிவு களைத் தொடர்ந்து பட்டியலிட்டு மற்ற குழந் தைகளின் செயல்பாடுகளோடு சிறப்பு விளை யாட்டுக்களில்  ஈடுபடும் குழந்தைகளின் ஆற்றலைச் சோதனை செய்து வந்தனர்.


991 பெண்குழந்தைகள் மற்றும் 1006 ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களின் குழந்தைகளைத்  தொடர்ந்து சிறப்பு விளை யாட்டு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்து மாறு ஆலோசனை கூறப்பட்டது.


மேலும் 12 வயதிற்குள்ளான குழந்தைகளின் ஆசிரியர்களும் வகுப்பறையில் குழந்தை களின் செயல்பாடு குறித்துக் கண்காணிக்க அறிவுரை கூறப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி புள்ளி விவரங்களைக் கவனமாக ஆய்வு செய்தனர். அதில் ஏ.டி.எச்.டி குறை பாடுகள் குறைந்த நிலையில் உள்ள குழந்தை களின் பெற்றோர்களும்  ஆசிரியர்களும் கொடுத்த முடிவுகளின்படி விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகளில் ஈடுபடும்  குழந்தைகள்  குழப்பமான பல காரணிகளுக்கு எளிய தீர்வுகளைத் தந்துள்ளனர்.


இதே நேரத்தில் ஆண் குழந்தைகள் தீர்விற் காகப் பிறரின் உதவியை அதிகம் நாடி உள்ள னர். இவர்கள் ஏ.டி.எச்.டி நோயிலிருந்து அதி கம் மீளாமலேயே உள்ளனர்.


பெண்குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு தீர்வைத் தருவதில் வேகம் காட்டு கின்றனர்.  இவர்கள் வீடு மற்றும் வெளியில்  புதுவகையான  செயல்பாடுகளில் அதிக ஈடு பாடு கொண்டவர்களாக உள்ளனர்.


இது தொடர்பாக ஆய்வு நடத்திய பகினி கூறியதாவது, “பெற்றோர்கள் தங்களின் குழந் தைகளுக்கு புதியவகை விளையாட்டுகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களின் கேள்வித்திறனை அதிகரிக்க உதவ  வேண்டும்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியில் பதிலளிக்கவேண்டும். புதிய கண்டு பிடிப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் காட்டு கூறி அவர்களும் அதில் ஈடுபட ஊக்கம் கொடுக்கவேண்டும் இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.


No comments:

Post a Comment