தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய 'தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்' என்ற நூலை தோழர் தா.பாண்டியன் வெளியிட ஜஸ்டீஸ் அரிபரந்தாமன் (ஓய்வு) பெற்றுக் கொண்டார். அறிவியல் அறிஞரும், பிரமோஸ் ஏவுகணைத் திட்ட இயக்குநருமான சிவதாணுப்பிள்ளை, தான் எழுதிய, "பிரமோசின் வெற்றி மந்திரம்", 40 Years with ABDUL KALAM Untold stories" ஆகிய இரண்டு புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: ரசியன் அறிவியல் கலாச்சார மய்யச் செயலாளர் தங்கப்பன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், அமைப்புச் செயலாளர் பன்னீர் செல்வம். (பெரியார் திடல், 24-12-2020)
பொது நலத் தொண்டர் திண்டிவனம் சிறீராமுலு, மேனாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சமூகநீதிக்கான கி. வீரமணி விருது பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு வி.சி.க.வின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி மலர் கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். (பெரியார் திடல், 24.12.2020)
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளி முதல்வர் க.வனிதா, பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை பாக்கியலெட்சுமி, பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சரஸ்வதி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு நாளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா மாலை அணிவித்து சிறப்பு செய்தார், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பெரியாரின் நினைவு நாளில் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் மற்றும் வல்லம் பிரிவு சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலைகளுக்கு பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் (வல்லம் - 24.12.2020)
திராவிடன் நிதியின் சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆயிரம் விளக்கு சேகர் 5 விடுதலைக்கான சந்தா தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (24.12.2020)
பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மயிலை நா. கிருட்டிணன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.








No comments:
Post a Comment