புதுக்கோட்டை, டிச. 18- புதுக் கோட்டை மாவட்ட திரா விடர் கழக அலுவலகத்தில் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88-ஆவது பிறந்த நாளை முன் னிட்டு மூன்று நூல்கள் அறி முகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்விற்கு மாவட் டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ப.வீரப்பன் முன்னிலை வகித்தார். மாநில ப.க. இணைச் செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கலை முரசு, தொகுதிப் பொறுப்பா ளர் திருமறவன், கொள்கை பரப்பு மாநிலத் துணைச் செயலாளர் ஷாஜகான், ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். மேலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய மூன்று நூல்களான "ஒப்பற்ற தலைமை", "வாழ்வியல் சிந்த னைகள் 15-ஆம் தொகுதி" மற் றும் பேராசிரியர் அருணன் எழுதிய "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழ கம்" ஆகிய நூல்களை அறி முகம் செய்து பேசினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகரத் தலைவர் கண்ணன், நகரச் செயலாளர் தருமராசு, ஒன்றியச் செயலா ளர் சாமி.இளங்கோ, மாவட்ட ப.க.தலைவர் செ.அ.தர்ம சேகர், செயலாளர் இரா.மலர்மன்னன், தி.குணசேக ரன், சேவியர், உள்ளிட்ட பல ரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் புத்த கங்கள் பெற்றுக் கொண்டு பலருக்கும் ஆசிரியர் அவர் களின் நூல்களைப் பரிசளிப்ப தற்காக நூல்களை வாங்கிச் சென்றனர்.

No comments:
Post a Comment