செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

செய்தியும், சிந்தனையும்....!

அடி துவக்கம்

ராஜஸ்தான் நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் முதலிடம். சுயேச்சைகள் இரண்டாம் இடம். பிஜேபிக்கு மூன்றாம் இடம்.

வடநாட்டிலேயே சரிவு தொடக்கம் என்று பொருள்.அடுத்துத் தமிழ்நாட்டிலே வாங்க இருக்கிறது பெரிய அடி!

எச்சரிக்கை!

சென்னை அய்.அய்.டி.யில் 104 பேருக்குக் கரோனா!

படித்தவர்கள் மத்தியிலேயே இந்த நிலை என்றால், மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற சமிக்ஞை இது.

ஆச்சரியம் என்ன?

அம்மா குடிநீர் திட்டம் முடக்கம்.

அம்மா எதிர்த்த உதய் மின் திட்டம் - அம்மா எதிர்த்த  நீட்' கூடத்தான் .தி.மு.. ஆட்சியில் கைவிடப்பட்டது. அப்படி இருக்கும்போது இதில் என்ன ஆச்சரியம்?

பல்லவியும் - சரணமும்!

கமல் பிரச்சாரத்திற்கு வரவேற்பு - தி.மு.. வட்டாரத்தில் சலசலப்பு: - ‘தினமலர்' செய்தி.

எங்கே பல்லவி தொடங்கினாலும் கடைசியில்தினமலர்'க் கும்பலுக்குச் சரணம் பாடுவது என்பது தி.மு..வை இடருவது - சீண்டுவதுதான் - தெரிந்துகொள்வீர் பார்ப்பனர்களை - அவர்களின் ஏடுகளை!

எந்த பாணி?

100 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை:- தமிழக பா... அதிரடி திட்டம்.

முன்புமிஸ்டு காலில்' உறுப்பினர்களைச் சேர்த்தார்களே - அதே பாணியிலா?

கார்ப்பரேட்டுகளின் கல்லாப் பெட்டி!

டில்லியில் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப், அரியானா, இமாச்சலப்பிரதேசங்களுக்கு நாள்தோறும் ரூ.3,500 கோடி இழப்பு.

எந்த இழப்பு ஏற்பட்டால் என்ன? கார்ப்பரேட்டுகளின் கல்லாப் பெட்டி மட்டும் நிரப்பவேண்டும் என்பதுதானே மத்திய அரசின் நோக்கம்!

என்று தணியுமோ?

நானும்கூட அரசியலுக்கு வர இருக்கிறேன்: - நடிகர் பார்த்திபன்.

மக்கள் ஏமாந்தால் யாரும் அவர்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம். என்று தணியுமோ இந்த சினிமா மோகம்?

பா..கவின் அணுகுமுறை?

சீக்கியர்கள் - இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்த பா.ஜக. முயற்சி.

மத மோதலை ஏற்படுத்தி குளிர் காய்வதுதானே பா...வின் அணுகுமுறை.

வளர்ச்சியோவளர்ச்சி!

கியாஸ் சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.50 உயர்வு (15 நாள்களின் ரூ.100 அதிகரிப்பு).

பா... ஆட்சியில் வளர்ச்சியைக் காட்டவேண்டாமா? அதுதான், இது!

தகுதி - திறமை பேசுவோரே!

2391 அரசு பள்ளிகளில் கழிவறை - குடிநீர் வசதி இல்லை - கல்வித் துறை தகவல்.

இந்த லட்சணத்தில் தகுதி திறமையாம் - ‘நீட்' தேர்வாம் - புடலங்காயாம்! முதலில் அனைத்துக் கல்வி சாலைகளிலும் அடிப்படை வசதிகள், தேவைகளை நிறைவேற்றட்டும்!

பிறகு பேசட்டும் தகுதி திறமை!

No comments:

Post a Comment