சென்னை (மேற்கு) மாவட்ட கழகத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து சீரிய முறையில் இயக்கப் பணிபுரிந்த கழகத் தோழர் வில்லிவாக்கம் அர.சிங்காரவேலு (வயது 72) 15.12.2020, பகல் 2.40 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சி.சரோஜினி என்ற மனைவியும், சி.அன்புச் செல்வன், சி.அன்பழகன் ஆகிய மகன்களும் உள்ளனர். செம்பியம் தலைவர் ப.கோபாலகிருட்டிணனின் மைத்துனர் ஆவார். இன்று (16.12.2020) காலை 8 மணியளவில், சென்னை மண்டல கழகச் செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று அர.சிங்காரவேலு உடல் மீது கழகக் கொடி போர்த்தியும், மலர் மாலை வைத்தும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பகல் 3 மணியளவில், வி.வி.நகர் (பூம்புகார் நகர் - கொளத்தூர்) 2ஆவது தெருவில் உள்ள இல்லத்திலிருந்து, இறுதி ஊர்வலம் புறப்பட்டு மக்காராம் தோட்டம் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment