தருமபுரி, டிச. 16- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்ற படிப்பகத்தில் விடுதலை வாசகர் வட்ட இரண்டா வது கருத்தரங்கம் 5-.12.-2020 சனிக் கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் கு.தங்கராசு தலைமை ஏற்றார். வாசகர் வட்ட அமைப்பாளர் பூங்குன்றன் வர வேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில திரா விட மாணவர் கழக துணை செய லாளர் த.யாழ்திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தக வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய 'ஒப்பற்ற தலைமை', 'வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 15', மார்க்சிய சிந்தனை எழுத்தாளர் அருணன் எழுதிய Ôஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்Õ என்னும் மூன்று புத்தகங்களை மாவட்ட கழகத் தலைவர் வீ .சிவாஜி வெளியிட் டார். மாவட்ட பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு. முல்லையரசு, மோளையா னூர் ஊராட்சி மன்ற தலைவர் துரைப்பாண்டியன், பால்வள தலைவர் உதயசூரியன், பூங்குன்றன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கருத்தரங்கம்
‘பெரியார் -அம்பேத்கர் பார் வையில் சமூக நீதி’ என்னும் தலைப் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை பாவலர் பெரு.முல் லையரசு தொடங்கி வைத்து பேசி னார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர்செந்தில் குமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி ஒருங்கிணைத்து நடத்தினார். இறுதியாக விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.அமு தக் கொடை நன்றி கூறினார்.
கருத்தரங்க நிகழ்ச்சியில் ஒன் றிய கழகத் தலைவர் மதிவாணன், ஆனந்தன், இளவரசி, சுஜித்குமார், வினோத்,தமிழரசன், சுகந்தன், பரத்குமார், சுஜித்குமார், சரண்யா, அரவிந்தன், பொழில்நிதி, கவிநிதி, தாட்சாயினி, சந்தானலட்சுமி, சிலம் பரசி, மோகன்குமார், மாதேஷ், உட்பட 35 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment