வேளாண் பிரச்சார வாகனத்துக்கு பூஜையா?
திருப்பூர், டிச. 16- தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையினர் வழிபாடு நடத்தி மதச்சார்பின்மையை அவம தித்துள்ளனர்.
மத்திய,மாநில அரசுகள் இணைந்து வழங்கும் திட்டமான பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த தகவல் களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வேளாண்மை துறை சார்பில் வாகன பிரச்சாரம் துவக்க நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 14.12.2020 அன்று நடைபெற்றது. அப்போது தேங்காய் உடைத்து, பழம், திருநீறு, குங்குமம், மஞ்சள் கலந்த அரிசி சகிதமாக சூடம் கொளுத்தப்பட்டு திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குநர் வடிவேல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மகா தேவன், வேளாண்மைதுறை அலு வலர் யுவராஜா ஆகியோர் முன்னி லையில் பூஜை நடைபெற்று, வாக னத்தின் சக்கரங்களுக்கு எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கப்பட்டு அரசு அலுவலக வளாகத்தில் மதச்சார் பின்மையை கடைப்பிடிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே மதச்சார்பின்மை கோட்பாட்டை குழிதோண்டி புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரசு அதிகாரிகளா? மத போதகர்களா?
திருப்பூர் பல்லடம் சாலை தென் னம்பாளையத்திலுள்ள வேளாண்மை துறை அலுவலகத்திலும் கோவில் கட்டுவதும்,பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறபடியாலும், தற்போது மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தையே பஜனை மட மாக்கி மதச்சார்பின்னையை அவ மதிப்பதையே குறிக்கோளாக கொண் டிருக்கும் வேளாண்மை துறை அலுவலர்கள் அரசு அதிகாரிகளா? அல்லது மதபோதகர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதம் சார்ந்த வழிபாடுகளை அவரவர் வீடுகளில் வைத்துக் கொள் ளலாமே! அரசாங்க இடத்தில் மத வழிபாடுகளை நடத்துவது இந்திய அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப் பட்ட "மதச்சார்பின்மை" (sமீநீuறீணீக்ஷீ) என்ற பன்முகத்தன்மைக்கும் அதனைத் தழுவி நீதிமன்றங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஆணைகளுக்கும் முரணானது என்ற அடிப்படை விதி கூட அரசு அலுவலர் களுக்கு தெரியாதா? என்று பொதுமக் கள் குறை தீர்க்கும் நாளில் அலுவல் நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த அத்துமீறல் குறித்து வேளாண்மை துறை அலுவலர்கள் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. நடவடிக்கை தவறும் பட் சத்தில் இப்பிரச்சினை குறித்து நீதி மன்றத்தை அணுகவிருப்பதாக இச் சம்பவத்தை நேரில் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அரசுக்கு சொந்தமான இடங்களில் மதவழிபாட்டு தலங்கள் கட்டப்பட்ட அத்துமீறல் தொடர் பாக மதச்சார்பின்மையாளர்களால் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டிருப்பதும், இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன் றங்களில் தொடுக்கப்பட்ட வழக்கு களில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் பிரதிவாதிகளுள் ஒருவராக சேர்க்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment